தேசியம்
செய்திகள்

இடர்கால உதவித் திட்டங்களை நீட்டிக்கும் அரசாங்கம்!

COVID இடர்கால உதவித் திட்டங்களை கனேடிய அரசாங்கம் நீட்டிக்கிறது. வெள்ளிக்கிழமை இது குறித்த அறிவித்தல் வெளியானது. October மாதம் 23ஆம் திகதிவரை உதவித் திட்டங்களை நீடிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

இதன் மூலம், இந்த கோடை காலத்தில் இடர்கால உதவித் திட்டங்களை படிப்படியாக நிறுத்துவதற்கான திட்டத்தை மத்திய அரசு கைவிட்டுள்ளது.

மாறாக தற்போதைய நிலைகளில் உதவித் திட்டங்களை முடக்கி, ஏற்கனவே அறிவிக்கப்பட்டதைவிட கூடுதலாக ஒரு மாதத்திற்கு மேலதிகமாக உதவியை நீடிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

இதன் மூலம் வணிகங்களுக்கான ஊதியம், வாடகை மானியங்கள், தொழிலாளர்களுக்கான வருமான உதவி உள்ளிட்ட திட்டங்கள் October 23வரை நீடிக்கப்பட்டுள்ளது.

Related posts

1957க்கு பின்னர் மிக வேகமாக மக்கள் தொகை வளர்ச்சியை எதிர்கொள்ளும் கனடா!

Lankathas Pathmanathan

65 சதவீத Air Canada விமானங்கள் செவ்வாயன்று தாமதமாக தரையிறங்கின!

குடிவரவு அமைச்சரின் அலுவலகம் சேதம்

Lankathas Pathmanathan

Leave a Comment