September 11, 2024
தேசியம்
செய்திகள்

Ontario மீண்டும் முழுமையாக திறக்கப்படும்போது ; பொது சுகாதார நடவடிக்கைகள் பலவும் நீக்கப்படும்!

மீளத் திறக்கும் திட்டத்தில் கட்டுப்பாடுகளை நீக்குவது பற்றிய விவரங்களை Ontario அரசாங்கம் வெளியிடுகின்றது.

மீளத் திறக்கும் திட்டத்தில் தற்போது மூன்றாவது நிலையில் இருக்கும் Ontario, மீண்டும் முழுமையாக திறக்கப்படும்போது, முக கவசங்களை உட்புறத்தில் கட்டாயமாக அணியும் நடைமுறை அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டது.

மாகாணம் மீண்டும் முழுமையாக திறக்கப்படும்போது, பெரும்பாலான பொது சுகாதார நடவடிக்கைகள் நீக்கப்படும் என மாகாண சுகாதார அமைச்சரின் பேச்சாளர் கூறினார்.

Ontario மாகாணம் மீண்டும் திறக்கும் திட்டத்தின் மூன்றாம் கட்டத்திலிருந்து வெளியேறுவதற்கான முதல் அளவுகோலை வியாழக்கிழமை தாண்டியமை குறிப்பிடத்தக்கது

மாகாணம் மீண்டும் திறக்கும் திட்டத்தின் மூன்றாம் கட்டத்திலிருந்து வெளியேறக்கூடிய ஆரம்ப திகதி August மாதம் 6ஆம் திகதியாகும் என்பது நினைவு கூறத்தக்கது.

Ontarioவில் வெள்ளிக்கிழமை மதியம் வரை சுமார் 69 சதவீதமான தகுதியுள்ள கனேடியர்கள் முழுமையாக தடுப்பூசி பெற்றுள்ளனர்.

Related posts

மாகாண சபை தேர்தலில் மூன்று கட்சி தலைவர்கள் வெற்றி

Lankathas Pathmanathan

இஸ்லாமிய அரசு தொடர்பான பயங்கரவாத குற்றச்சாட்டுகளை Calgary நபர் ஒப்புக்கொண்டார்

Justin Trudeauவின் தலைமையை Brian Mulroney பாராட்டினார்!

Lankathas Pathmanathan

Leave a Comment