தேசியம்
செய்திகள்

Manitoba மாகாண அமைச்சர் ஒருவர் பதவி விலகல்!

Manitoba மாகாணத்தின் சுதேச விவகார மற்றும் வடக்கு விவகார அமைச்சர் Eileen Clarke அமைச்சரவையில் இருந்து விலகியுள்ளார்.

காலனித்துவ குடியேறிகள் குறித்த மாகாண முதல்வரின் கருத்துக்களை தொடர்ந்து அமைச்சரவையில் இருந்து விலக Clarke தீர்மானித்துள்ளார். சுதேசிய எதிர்ப்பாளர்களால் Manitoba மாகாணத்தில் சிலைகள் சில சேதப்படுத்தப்பட்டது தொடர்பாக காலனித்துவ குடியேறிகள் குறித்து முதல்வர் Brian Pallister சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்த ஒரு வாரத்திற்கு பின்னர் இந்த பதவி விலகல் நிகழ்ந்துள்ளது.

முதல்வரின் கருத்துக்களை, Manitobaவில் உள்ள முதற்குடி மக்களுக்கு எதிரான வெறுக்கத்தக்க தாக்குதல் என Manitoba முதற்குடியின இடைக்கால தலைவர் Leroy Constant கூறியிருந்தார். இந்த பதவி விலகல் குறித்து ஏமாற்றமடைவதாக கூறிய Constant, அவரது முடிவைப் பாராட்டியுள்ளார்.

இந்த நிலையில் Manibota முதல்வர் வியாழக்கிழமை காலை புதிய அமைச்சரவை அமைச்சர்களை அறிவிப்பார் என இன்று முதல்வர் அலுவலகத்தில் இருந்து வெளியான ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. தனது பதவி விலகல் தொடர்பாக Clarke என்ன காரணங்களைக் கூறினார் என்பது குறித்து முதல்வர் அலுவலகம் கருத்து தெரிவிக்கவில்லை.

Related posts

 COVID காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைவு

Lankathas Pathmanathan

July மாத இறுதிக்குள் கனடா 68 மில்லியன் தடுப்பூசிகளை பெறும்

Gaya Raja

Pride நிகழ்வுகளின் பாதுகாப்பிற்கு $1.5 மில்லியன் நிதி உதவி

Lankathas Pathmanathan

Leave a Comment