தேசியம்
செய்திகள்

காணாமல் போன இரண்டு பாகிஸ்தான் விமான பணிப்பெண்கள் கனடாவில் புகலிடம் கோரினர்?

Torontoவில் தரையிறங்கிய பின்னர் காணாமல் போன இரண்டு பாகிஸ்தான் விமான பணிப்பெண்கள் கனடாவில் புகலிடம் கோரியுள்ளனர்.

இவர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கனடிய குடிவரவு வழக்கறிஞர் இந்த தகவலை வெளியிட்டார்.

பாலினம் தொடர்பான துன்புறுத்தல், மத துன்புறுத்தல், குடும்ப வன்முறையை உள்ளடக்கிய கோரிக்கைகளுக்காக  இவர்கள் கனடாவில் புகலிடம் கோரியுள்ளனர்.

இவர்கள் Toronto Pearson சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கிய பாகிஸ்தான் சர்வதேச விமானத்தின் (PIA) விமானப் பணிப் பெண்களாவார்கள்.

கடந்த ஒன்றரை ஆண்டுகளில் குறைந்தது எட்டு PIA  உதவி பணியாளர்கள் இவ்வாறு கனடாவில் காணாமல் போயுள்ளதாக பாகிஸ்தான் அரசாங்கத்திற்கு சொந்தமான விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த தசாப்தத்தில் தனது ஊழியர்கள் தொடர்பான இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதை PIA ஏற்றுக் கொண்டுள்ளது.

ஆனாலும் Torontoவில் தரையிறங்கிய உடன் விமானப் பணிப்பெண்கள் காணாமல் போகும் சம்பவங்கள் அண்மையில் அதிகரித்துள்ளதாக PIA கூறுகிறது.

இவர்கள் அனைவரும் கனடாவில் புகலிடம் கோரியுள்ளதாக நம்புவதாக விமான நிறுவன பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

இவ்வாறு இரண்டு புகலிட குடிவரவாளர்களில் ஒருவருக்கு கனடாவில் புகலிடம் வழங்கப்பட்டுள்ளதாகவும் மற்றொருவரின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதாகவும் தெரியவருகிறது.

இவர்களில் ஒருவர், பாலினம் தொடர்பான துன்புறுத்தலின் அடிப்படையில் தஞ்சம் கோரிய ஷியா முஸ்லிமாவார்..

பாகிஸ்தானில் இருந்து அகதிகள் கோரிக்கையாளர்களை கனடா தொடர்ந்து எதிர்கொள்கிறது.

பாகிஸ்தான், பல ஆண்டுகளாக கனடாவிற்கு அகதிகள் உரிமை கோருபவர்களின் முக்கிய ஆதார நாடுகளில் ஒன்றாக உள்ளது.

இவர்களின் அகதி உரிமை கோரிக்கை அதிக அளவில் ஏற்றுக் கொள்ளப்படும் விகிதத்தைக் கொண்டுள்ளதாக குடிவரவு வழக்கறிஞர்கள் தெரிவிக்கின்றனர்.

பாகிஸ்தானில் இருந்து ஏற்றுக்கொள்ளப்பட்ட புகலிடக் கோரிக்கைகளின் எண்ணிக்கை 10 ஆண்டுகளில் அதிகரித்துள்ளதாக கனடாவின் குடிவரவு, அகதிகள் வாரியத்தின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த ஆண்டு, பாகிஸ்தானியர்களிடமிருந்து மொத்தம் 1,643 கோரிக்கைகளில் 1,402 உரிமை கோரல்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன.

2022 இல், மொத்தம் 1,576 இல் 1,210 உரிமை கோரல்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன.

2013 இல் 315 உரிமை கோரல்களில் 267 மட்டுமே ஏற்றுக் கொள்ளப்பட்டன.

2023 ஆம் ஆண்டில், பாகிஸ்தான் உட்பட பல்வேறு நாடுகளில் இருந்து கனடாவில் 51,848 மொத்த புகலிடக் கோரிக்கைகள் பதிவு செய்யப்பட்டன.

Related posts

வெளிநாட்டு தலையீடு குறித்த பொது விசாரணை குறித்து நம்பிக்கை: NDP தலைவர்

Lankathas Pathmanathan

கனடியர்களுக்கு செலுத்தப்படும் COVID தடுப்பூசிகள்

Lankathas Pathmanathan

கனேடிய இராணுவம் எதிர்வரும் நாட்களில் காபூலை விட்டு வெளியேறும்!

Gaya Raja

Leave a Comment