அடுத்த ஆண்டுக்குள் வீட்டு விலைகள் உச்ச நிலையை எட்டலாம் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
வீட்டு விலைகள் அடுத்த ஆண்டுக்குள் 2022 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் காணப்பட்ட உச்ச நிலையை எட்டக்கூடும் என Canada Mortgage and Housing Corporation – CMHC – கணித்துள்ளது.
2026ஆம் ஆண்டுக்குள் வீட்டு விலைகள் புதிய உச்சத்தை எட்டும் எனவும் CMHC எதிர்வு கூறுகின்றது.
கனடாவில் புதிய வீடுகளின் கட்டுமான எண்ணிக்கை இந்த ஆண்டு குறையும் எனவும் CMHC வெளியிட்ட அண்மைய வீட்டுச் சந்தைக் கண்ணோட்ட அறிக்கை கூறுகிறது.
ஆனாலும் புதிய வீடுகள் கட்டுமானம் 2025, 2026 ஆண்டுக்குள் மீண்டும் உச்ச நிலையை எட்டும் என அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.
இது புதிய கட்டுமானத்தில் அதிக வட்டி விகிதங்களின் பின்தங்கிய விளைவை பிரதிபலிக்கிறது.
CMHC கடந்த வாரம் வெளியிட்ட ஒரு அறிக்கை, கனடாவின் ஆறு பெரிய நகரங்களில் கடந்த ஆண்டு 137,915 புதிய வீடுகள் கட்டுமானம் ஆரம்பித்ததை சுட்டிக் காட்டியது.