தைவானில் நிகழ்ந்த நிலநடுக்கத்தில் இரண்டு கனடியர்கள் பலியாகினர்.
ஹாங்காங்கை சேர்ந்த இரண்டு கனடியர்களின் உடல்கள் இடிபாடுகளில் கண்டெடுக்கப்பட்டது.
தைவானின் கிழக்கு கடற்கரையில் செவ்வாய்க்கிழமை (02) ஏற்பட்ட நிலநடுக்கத்தில் இவர்கள் பலியாகினர்.
இந்த நிலையில் தைவானில் உள்ள கனடிய குடிமக்கள் கனடிய வெளிவிவகார அமைச்சில் கனடாவில் பதிவு செய்ய வேண்டும் என கோரப்படுகிறது.
வெளியுறவு அமைச்சர் Mélanie Joly புதன்கிழமை (03) இந்த கோரிக்கையை முன்வைத்தார்.
தைவானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் குறைந்தது ஒன்பது பேர் பலியாகியதாக அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த ஆலோசனையை கனடியர்களுக்கு மத்திய அரசு வழங்குகிறது.
தைவானில் உள்ள உதவி தேவைப்படும் கனடியர்கள் அவசர கண்காணிப்பு, பதில் மையத்தை (Emergency Watch and Response Centre) தொடர்பு கொள்ளுமாறும் அவர் வலியுறுத்தினார்.
இந்த நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பிரதமர் Justin Trudeau தனது ஆதரவை தெரிவித்தார்.