தமது தாயகத்தில் எதிர்கொள்ளப்படும் நெருக்கடியை எதிர்கொள்ளும் முயற்சிகளுக்கு ஆதரவளிக்குமாறு கனடாவில் வாழும் ஹைட்டிய சமூகத் தலைவர்கள் கனடிய அரசாங்கத்தை வலியுறுத்துகின்றனர்.
Quebec மாகாணத்தில் ஹைட்டியில் இருந்து புலம்பெயர்ந்தோர் சுமார் 150,000 பேர் வசித்து வருகின்றனர்.
ஹைட்டி பிரதமர் Ariel Henry விரைவில் பதவி விலகவுள்ளதாக செவ்வாய்க்கிழமை (12) அறிவித்தார்.
ஒரு இடைக்கால ஜனாதிபதி குழு உருவாக்கப்பட்டவுடன் தான் பதவி விலகவுள்ளதாக அவர் கூறினார்.
ஆயுத குழுக்கள் நாட்டின் பல பகுதிகளை கைப்பற்றி உள்ள நிலையில் அமைதியின்மை அதிகரித்து வருகிறது.
அதிகரித்து வரும் அமைதியின்மை, வன்முறை காரணமாக ஹைட்டியின் விமான நிலையம், துறைமுகம் ஆகிய மூடப்பட்டுள்ளன.