February 23, 2025
தேசியம்
செய்திகள்

UP Express புகையிரதம் மோதியதில் 2 பேர் பலி

UP Express புகையிரதம் மோதியதில் 2 பேர் உயிரிழந்தனர்.

Toronto நகரின் மேற்கு பகுதியில் திங்கட்கிழமை மாலை UP Express புகையிரதம் மோதியதில் ஒரு ஆணும் பெண்ணும் இறந்துள்ளனர்.

Weston Road and Eglinton Avenue West பகுதியில் இரவு 10 மணியளவில் இந்த சம்பவம் நிகழ்ந்தது.

ஒருவரை புகையிரதம் மோதியதாக சம்பவ இடத்திற்கு அழைக்கப்பட்ட அவசர உதவி பிரிவினர் இரண்டாவது நபரை கண்டுபிடித்தனர்.

இரண்டு நபர்களும் சம்பவ இடத்தில்  இறந்து விட்டதாக காவல்துறையினர் அறிவித்தனர்.

இந்த சம்பவம் எவ்வாறு நிகழ்ந்தது என்பதைத் தீர்மானிக்க வில்லை எனவும் ஆரம்ப விசாரணைகள் தொடர்வதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம்: NDP தலைவர் உறுதி

Lankathas Pathmanathan

இலையுதிர் காலஇறுதிக்குள் மீண்டும் நாடாளுமன்றம் கூடும்: பிரதமர் Trudeau !

Gaya Raja

Cantaloupe salmonella பாதிப்பில் ஒருவர் பலி!

Lankathas Pathmanathan

Leave a Comment