ஜோர்டான் மன்னர் இரண்டாம் அப்துல்லா இந்த வாரம் பிரதமர் Justin Trudeauவை சந்திக்கவுள்ளார்.
மன்னர் இரண்டாம் அப்துல்லா புதன்கிழமை (14) கனடா வருகை தர உள்ளார்.
மன்னர் இரண்டாம் அப்துல்லா புதன்கிழமை கனடாவை வந்தடைவார் என கனடிய பிரதமர் அலுவலகம் ஞாயிற்றுக்கிழமை (11) உறுதிப்படுத்தியது.
மத்திய கிழக்கில் அமைதி, பாதுகாப்பு குறித்து இருவரும் விவாதிப்பார்கள் என பிரதமர் அலுவலகம் கூறுகிறது.
சமீபத்திய இஸ்ரேல்-ஹமாஸ் போரினால் பாதிக்கப்பட்ட காசாவில் உள்ள பொதுமக்களுக்கு மனிதாபிமான நிவாரணங்களை வழங்குவது குறித்தும் இரு நாட்டு தலைவர்களும் விவாதிப்பார்கள் எனவும் கூறப்படுகிறது.
இந்த உரையாடல்கள் நிலையான போர் நிறுத்தம், காசா பிராந்தியத்தின் அமைதிப் பாதைக்கான ஆதரவையும் உள்ளடக்கும் என தெரியவருகிறது.
1999 ஆம் ஆண்டு பதவியேற்ற பின்னர், இரண்டாம் அப்துல்லா மன்னரின் ஏழாவது கனடா பயணமாக இது அமைகிறது.