தேசியம்
செய்திகள்

ஜோர்டான் மன்னர் கனடா வருகை!

ஜோர்டான் மன்னர் இரண்டாம் அப்துல்லா இந்த வாரம் பிரதமர் Justin Trudeauவை சந்திக்கவுள்ளார்.

மன்னர் இரண்டாம் அப்துல்லா புதன்கிழமை (14) கனடா வருகை தர உள்ளார்.

மன்னர் இரண்டாம் அப்துல்லா புதன்கிழமை கனடாவை வந்தடைவார் என கனடிய பிரதமர் அலுவலகம் ஞாயிற்றுக்கிழமை (11) உறுதிப்படுத்தியது.

மத்திய கிழக்கில் அமைதி, பாதுகாப்பு குறித்து இருவரும் விவாதிப்பார்கள் என பிரதமர் அலுவலகம் கூறுகிறது.

சமீபத்திய இஸ்ரேல்-ஹமாஸ் போரினால் பாதிக்கப்பட்ட காசாவில் உள்ள பொதுமக்களுக்கு மனிதாபிமான நிவாரணங்களை வழங்குவது குறித்தும் இரு நாட்டு தலைவர்களும் விவாதிப்பார்கள் எனவும் கூறப்படுகிறது.

இந்த உரையாடல்கள் நிலையான போர் நிறுத்தம், காசா பிராந்தியத்தின் அமைதிப்  பாதைக்கான ஆதரவையும் உள்ளடக்கும் என தெரியவருகிறது.

1999 ஆம் ஆண்டு பதவியேற்ற பின்னர், இரண்டாம் அப்துல்லா மன்னரின் ஏழாவது கனடா பயணமாக இது அமைகிறது.

Related posts

அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட Pfizer தடுப்பூசிகள் அடுத்த வாரம் கனடாவுக்கு ஏற்றுமதி

Gaya Raja

கட்டுப்பாடுகளை மீறும் ஒன்று கூடல்கள் ஏமாற்றமளிக்கின்றன – நாடாளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி

Lankathas Pathmanathan

இலங்கை விவகாரத்தில் கனடாவின் செயலற்ற தன்மை – கனடிய தமிழர் பேரவை கவலை

Lankathas Pathmanathan

Leave a Comment