தேசியம்
செய்திகள்

67 ஆயிரம் Honda, Acura வாகனங்கள் மீள அழைப்பு

கனடாவில் 67 ஆயிரம் வரையிலான Honda, Acura வாகனங்கள் திரும்ப அழைக்கப்படுகின்றன.

கனடாவில் 66,846 வாகனங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக Honda செவ்வாய்க்கிழமை (06) அறிவித்தது.

முன் இருக்கை பயணிகள் airbag உணரிகளில் – sensors – ஏற்படக்கூடிய சிக்கல்கள் காரணமாக இந்த அறிவித்தல் வெளியானது.

பாதிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்பட்டு திரும்ப அழைக்கப்படுகின்ற ஒரு சதவீத வாகனங்களில் இந்தக் குறைபாடு இருப்பதாக Honda மதிப்பிடுகிறது.

Honda Accord, Civic, CR-V, Fit, HR-V, Insight, Odyssey, Ridgeline ஆகிய வாகனங்களிலும், Acura MDX, RDX, TLX ஆகிய வாகனங்களில் இந்த பாதிப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

பாதிக்கப்பட்ட வாகனங்கள் 2020 முதல் 2022 ஆண்டுகளில் தயாரிக்க பட்டவையாகும்.

Honda வாகன விற்பனையாளர்களுக்கு இந்த விடயம் கடந்த வெள்ளிக்கிழமை அறிவிக்கப்படதாக Honda கூறுகிறது.

இதனால் பாதிக்கப்பட்ட வாகனங்களின் உரிமையாளர்கள் அடுத்த மாதம் தொடர்பு கொள்ளப்படுவார்கள்.

Related posts

நாட்டுக்காகப் போராடி இறந்தவர்களை நினைவு கூர்ந்த கனடியர்கள்!

Gaya Raja

வேகமாக வாகனம் செலுத்தியதற்காக அபராதம் பெற்ற துணைப் பிரதமர்!

Lankathas Pathmanathan

அகதி கோரிக்கையாளர் மத்திய அதிகாரியின் முன்னர் தன்னை கத்தியால் குத்தினார்

Lankathas Pathmanathan

Leave a Comment