தேசியம்
செய்திகள்

RCMP விமானம் விபத்துக்குள்ளானதில் ஒருவர் காயம்

Yukon பிரதேசத்தின் Whitehorse விமான நிலையத்தில் RCMP விமானம் விபத்துக்குள்ளானதில் ஒருவர் காயமடைந்தார்.

திங்கட்கிழமை (17) காலை விபத்து ஏற்பட்டதையடுத்து விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது.

இந்த விபத்தில் குற்றச்செயல் தொடர்புடையதாக நம்பவில்லை என காவல்துறையினரின் செய்திக்குறிப்பு கூறுகிறது.

காயமடைந்தவர் விமானத்தில் இருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு காயங்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

RCMP ஊழியர் என மாத்திரம் அடையாளம் காணப்பட்ட நபர் மட்டுமே சம்பவ நேரத்தில் விமானத்தில் இருந்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்த விசாரணையை போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் வழிநடத்தும் என RCMP தெரிவித்துள்ளது.

Related posts

மேலாண்மை ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் கனடா Post

Lankathas Pathmanathan

ஐந்து வருட காலத்திற்குள் 252 பாடசாலை ஊழியர்கள் மீது குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டு

Lankathas Pathmanathan

கனடாவின் மிகப்பெரிய வேலை நிறுத்தம் இந்த வாரம் ஆரம்பம்?

Lankathas Pathmanathan

Leave a Comment