தேசியம்
செய்திகள்

Edmonton நகரசபை மண்டபத்தில் துப்பாக்கிச் சூடு

Edmonton நகரசபை மண்டபத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.

செவ்வாய்க்கிழமை (23) காலை 10:30 மணியளவில் இந்த சம்பவம் நிகழ்ந்ததாக காவல்துறையினர் உறுதிப்படுத்தினர்.

காலை நடைபெற்ற அவசர ஆலோசனைக் குழு கூட்டத்தில் இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் நடத்தப்பட்டது.

இதனை அடுத்து ஆலோசனைக் குழுக்கூட்டம் உடனடியாக இடைநிறுத்தப்பட்டது.

நகரசபை மண்டபத்தில் இருந்து அனைவரும் வெளியேற்றப்பட்டதாக தெரியவருகிறது.

இந்த சம்பவம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாக Edmonton காவல்துறையினர் தெரிவித்தனர்.

காவல்துறையினர் விசாரணையின் பின்னர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Related posts

நினைவு தின நிகழ்வுகளில் ஆயிரக் கணக்கானோர் பங்கேற்பு!

Lankathas Pathmanathan

தவறான COVID தகவல்கள் 2,800 கனடியர்களின் இறப்புகளுக்கு காரணமாகியது?

Lankathas Pathmanathan

Mexicoவில் கனடியர் ஒருவர் சுட்டுக் கொலை

Lankathas Pathmanathan

Leave a Comment