தேசியம்
செய்திகள்

Toronto நகர சபை உறுப்பினராக பதவியேற்ற தமிழர்

Toronto நகர சபைக்கான இடைத் தேர்தலில் வெற்றிபெற்ற பார்த்தி கந்தவேள் உத்தியோகபூர்வமாக பதவியேற்றார்.

Scarborough Southwest தொகுதியின் இடைத் தேர்தலில் பார்த்தி கந்தவேள் மொத்தம் 4,641 வாக்குகளை பெற்றார்.

இவர் Toronto நகர முதல்வர் Olivia Chow முன்னிலையில் வியாழக்கிழமை (07) உத்தியோகபூர்வமாக பதவியேற்றார்.

இந்த தேர்தலில் பார்த்தி கந்தவேள் மொத்தம் 4,641  வாக்குகளை பெற்றார்.

Kevin Rupasinghe இரண்டாவது இடத்தில் 3,854 வாக்குகளையும், Anna Sidiropoulos மூன்றாவது இடத்தில் 2,275 வாக்குகளையும் பெற்றனர்.

இருபதாவது தொகுதிக்கான இடைத் தேர்தலில் மொத்தம் 16,974 வாக்குகள் பதிவாகின

இவற்றில் மூன்று வாக்குகள் மறுக்கப்பட்டன. ஆறு வாக்குகள் நிராகரிக்கப்பட்டன.

இந்த இடைத்தேர்தலில் மொத்தம் 23 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

பார்த்தி கந்தவேள், 2014ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் இந்த தொகுதியில் கல்வி சபை உறுப்பினராக வெற்றி பெற்றவராவார்.

இவர் கடந்த நகரசபை தேர்தலில் Scarborough Southwest தொகுதியின் நகரசபை உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்டு இரண்டாவது இடத்தை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த தொகுதியின் நகரசபை உறுப்பினர் Gary Crawford, கடந்த July மாதம் பதவி விலகியிருந்தார்.

Scarborough-Guildwood தொகுதியின் மாகாணசபை இடைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக அவர் தனது   நகரசபை உறுப்பினர் பதவியில் இருந்து விலகியிருந்தார்.

இந்த  மாகாணசபை இடைத் தேர்தலில் Progressive Conservative கட்சியின் வேட்பாளராக போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

Related posts

ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு COVID தடுப்பூசி அனுமதியை Health கனடாவிடம் கோரவுள்ள Moderna

Lankathas Pathmanathan

Quebecகில் காட்டுத்தீயின் காரணமாக வெளியேற்றப்பட்டவர்கள் வீடு செல்ல அனுமதி

Lankathas Pathmanathan

ஆரம்பமாகும் Ontario மாகாணசட்டமன்றஅமர்வுகள் : ஆசிரியர்களை மீண்டும் சேவைக்கு வற்புறுத்தும் சட்ட மூலத்தை அறிமுகப்படுத்த அரசாங்கத்திற்கு உடனடித் திட்டங்கள் இல்லை!

thesiyam

Leave a Comment