தேசியம்
செய்திகள்

இங்கிலாந்தின் மூன்றாம் மன்னர் – கனேடிய முதற்குடியினர் தலைவர்கள் சந்திப்பு

இங்கிலாந்தின் மூன்றாம் மன்னர் Charles, கனேடிய முதற்குடியினர் தலைவர்களை வியாழக்கிழமை (04) சந்திக்க உள்ளனர்.

மன்னரின் முடிசூட்டு விழாவிற்கு முந்தைய இந்த சந்திப்பில் முதற்குடியினர் சட்டசபை தலைவர் Roseanne Archibald, Inuit Tapiriit Kanatam தலைவர் Natan Obed, Métis தேசிய சபை தலைவர் Cassidy Caron ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

கனடாவின் ஆளுநர் நாயகம் Mary Simon இந்த சந்திப்பில் கலந்து கொள்ளவுள்ளார்.

கனடாவின் முதற்குடியினர் மக்களுடன் மூன்றாம் மன்னருக்கு நீண்ட கால உறவு உள்ளதாக Buckingham அரண்மனை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்படுகிறது.

இங்கிலாந்து மன்னர் மூன்றாம் Charles முடிசூட்டு விழா எதிர்வரும் சனிக்கிழமை (06) நடைபெறுகிறது.

இந்த முடிசூட்டு விழாவில் பிரதமர் Justin Trudeau உட்பட கனடிய பிரதிநிதிகள் பலரும் கலந்து கொள்ளவுள்ளனர்.

Related posts

உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலுக்கு கனடா கண்டனம்

Lankathas Pathmanathan

காணாமல் போயுள்ள சிறுமியை கண்டுபிடிக்க பொதுமக்கள் உதவி கோரல்

Lankathas Pathmanathan

கனடாவில் நேற்று மாத்திரம் 97  புதிய COVID மரணங்கள்

Lankathas Pathmanathan

Leave a Comment