தேசியம்
செய்திகள்

Pickering சூதாட்ட மைய காவலாளி கொலையுடன் தொடர்புடைய வழக்கில் 17 வயது ஆணுக்கு பிடியாணை!

Pickering சூதாட்ட மைய காவலாளியின் கொலையுடன் தொடர்புடைய வழக்கில் 17 வயது ஆணுக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

17 வயது ஆணுக்கு கனடா முழுவதும் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக Durham பிராந்திய காவல்துறை தெரிவித்தது.

October மாதம் 9ஆம் திகதி அதிகாலை 5 மணியளவில் Pickering சூதாட்ட மையத்தின் காவலாளி Michael Ferdinand சுட்டுக் கொல்லப்பட்டார்.

Whitby குடியிருப்பாளரான இவர் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது.

34 வயதான இவரது மரணம் குறித்த குற்றச் சாட்டில் 17 வயது ஆணுக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கொலைக்கு தேடப்படும் இளைஞரை அடையாளம் காண காவல்துறை நீதிமன்ற அனுமதி பெற்றுள்ளது.

இந்த அங்கீகாரம் எதிர்வரும் சனிக்கிழமையுடன் (11) முடிவடைகிறது.

Tyjae Nosworthy-Smith என அடையாளம் காணப்பட்ட இவரது கைதுக்கு இரண்டாம் நிலை கொலைக்காக பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இவரது புகைப்படத்தையும் காவல்துறையினர் தற்காலிகமாக வெளியிட்டுள்ளனர்.

Related posts

கனடிய முதற்குடியினருக்கும் போப் பாண்டவருக்கும் இடையில் இந்த வாரம் சந்திப்பு

Lankathas Pathmanathan

பயிற்சிப் பயணத்தின் போது உலங்குவானூர்தி விபத்து – இரண்டு கனடிய விமானப்படையினர் மரணம்?

Lankathas Pathmanathan

கனடிய அரசின் அவசர நடவடிக்கைகளில் March மாதம் 21ஆந் திகதி புதிதாக அறிவிக்கப்பட்டவை | (English version below)

thesiyam

Leave a Comment