தேசியம்
செய்திகள்

Montreal யூத பாடசாலைகள் மீது துப்பாக்கி பிரயோகம்

Montreal நகரில் இரண்டு யூத பாடசாலைகள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.

பாடசாலைகள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதையடுத்து, விசாரணை நடத்தி வருவதாக Montreal காவல்துறை வியாழக்கிழமை உறுதிப்படுத்தியது.

United Talmud Torahs of Montreal Inc, Yeshiva Gedola ஆகிய பாடசாலைகள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக காவல்துறையில் முறையிடப்பட்டது.

புதன்கிழமை இரவு இந்த துப்பாக்கி பிரயோகங்கள் மேற்கொள்ளப்பட்டதாக முறையிடப்படுகிறது.

இந்த துப்பாக்கி பிரயோகங்கள் மேற்கொள்ளப்பட்டபோது பாடசாலைகளில் எவரும் இருக்கவில்லை எனவும் இதனால் எவரும் காயமடையவில்லை எனவும் கூறப்படுகிறது.

இந்த சம்பவங்கள் குறித்து எவரும் கைது செய்யப்படவில்லை.

இந்த வன்முறைச் செயல்களை கண்டிப்பதாக பிரதமர் Justin Trudeau கூறினார்.

Montreal நகரின் யூத சமூகத்தை குறிவைக்கும் சமீபத்திய வன்முறைகளை கண்டிப்பதாக நகர முதல்வர் Valerie Plante தெரிவித்தார்.

Related posts

தொடர்ந்தும் நானூறுக்கும் அதிகமாக காட்டுத்தீ எரிந்து வருகிறது

Lankathas Pathmanathan

Ontario நான்காவது தடுப்பூசிகளுக்கான தகுதியை விரிவுபடுத்துகிறது

Lankathas Pathmanathan

எரிவாயு, எரிபொருள் வரிகளை குறைக்கும் சட்டமூலம் Ontarioவில்

Lankathas Pathmanathan

Leave a Comment