February 16, 2025
தேசியம்
செய்திகள்

மேலும் 31 கனடியர்கள் காசாவை விட்டு வெளியேற்றம்

மேலும் 31 கனடியர்கள் வியாழக்கிழமை (09) Rafah எல்லை வழியாக காசாவை விட்டு வெளியேறினர்.

எகிப்துக்கான கனடா தூதர் Louis Dumas இந்த தகவலை உறுதிப்படுத்தினார்.

இதன் மூலம் காசாவில் இருந்து வெளியேற்றப்பட்ட மொத்த கனேடியர்கள் எண்ணிக்கை 106 ஆக உயர்ந்துள்ளது.

அங்கீகரிக்கப்பட்ட பெயர்கள் பட்டியலில் இருந்த 40 கனேடியர்களில் வியாழன் பிற்பகல் 31 பேர் காசாவை விட்டு வெளியேற முடிந்தது என்பதை உறுதிப்படுத்த முடியும் என்று தூதுவர் தெரிவித்தார்.

75 கனேடிய குடிமக்கள், நிரந்தர குடியிருப்பாளர்கள், அவர்களது குடும்பங்கள் அடங்கிய முதல் குழு காசாவை விட்டு வெளியேறிய இரண்டு நாட்களுக்குப் பின்னர் வியாழனன்று 31 கனடியர்கள் காசாவை விட்டு வெளியேறினர்.

காசாவை விட்டு வெளியேறும் கனடியர்கள் கெய்ரோவுக்குச் செல்வார்கள் எனவும் அங்கிருந்து கனடா அழைத்து வரப்படுவார்கள் என கனடிய  அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனர்.

காசாவை விட்டு வெளியேறுபவர்களுக்கு கெய்ரோவில் இருக்கும் போது, கனடா தங்குமிடம், உணவு, அடிப்படைத் தேவைகளை வழங்குகிறது.

காசாவில் இருந்து வெளியேறுவார்கள் அதிகபட்சமாக மூன்று நாட்களுக்கு எகிப்தில் தங்குவதற்கு எகிப்து அரசாங்கம் அனுமதித்துள்ளதாக கனடிய மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் காசாவின் நிலைமை குறித்து கனடா மிகவும் கவலை அடைந்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் Melanie Joly தெரிவித்தார்.

Related posts

Arctic கடற்பகுதியில் சீனாவின் கண்காணிப்பை நிறுத்தியுள்ளோம்: கனேடிய இராணுவம்

Lankathas Pathmanathan

குழந்தைகளுக்கான Pfizer தடுப்பூசிக்கு Health கனடா அங்கீகாரம்

Lankathas Pathmanathan

வரவு செலவு திட்டம் குறித்து Conservative தலைவர் எச்சரிக்கை

Lankathas Pathmanathan

Leave a Comment