தேசியம்
செய்திகள்

Albertaவில் செவ்வாய் அறிவிக்கப்படவுள்ள புதிய கட்டுப்பாடுகள்!

Albertaவில் மேலும் COVID 19, கட்டுப்பாடுகள் செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்படவுள்ளன.

மாகாண முதல்வர்  Jason Kenney திங்கள் இந்த அறிவித்தலை வெளியிட்டார். Alberta தற்போது கனடா மற்றும் அமெரிக்காவில் தனிநபர் COVID தொற்று எண்ணிக்கையில் முன்னிலை வகிக்கிறது. Albertaவில் திங்கள்  2,012 புதிய தொற்றுக்கள் பதிவாகின. இவற்றில் 1,900வரை தொற்றின் புதிய திரிபு என தெரியவருகின்றது

இந்த நிலையில் அனைவரும் பொது சுகாதார கட்டுப்பாடுகளை பின்பற்றுமாறு Kenney மீண்டும் வலியுறுத்தினார். மாகாணத்தால் புதிய கட்டுப்பாடுகள் உருவாக்கப்பட்டு வருவதாகவும், இது குறித்து மேலதிக விவரங்கள் செவ்வாய் அறிவிக்கப்படும் எனவும் Kenney கூறினார்.

Alberta மருத்துவமனையில் 658 பேர் தொற்றுடன் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இவர்களில் 154 பேர் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Related posts

தேசியத்தின் ஆசனப் பகிர்வு கணிப்பு

Gaya Raja

COVID-19 பேரிடர் காலத்தில் பேருதவி: முன் மாதிரியாக கனடாவில் Inforce Foundation

thesiyam

நிறுத்தப்படும் COVID எச்சரிக்கை செயலியின் பயன்பாடு

Leave a Comment

error: Alert: Content is protected !!