வட்டி விகிதத்தை 5 சதவீதத்தில் தொடர்ந்து வைத்திருக்க கனடிய மத்திய வங்கி முடிவு செய்துள்ளது
புதன்கிழமை (06) இந்த முடிவை மத்திய வங்கி அறிவித்தது.
மூன்றாவது முறையாக மத்திய வங்கி தனது முக்கிய விகிதத்தை தொடர்ந்து 5 சதவீதத்தில் வைத்திருக்க முடிவு செய்துள்ளது
அதிகரித்த வட்டி விகிதங்கள் பணவீக்கத்தைக் குறைக்க உதவுகின்றன என்பதற்கான சான்றுகளின் அடிப்படையில் இந்த முடிவை மத்திய வங்கி எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
கனடிய மத்திய வங்கியின் அடுத்த நடவடிக்கை வட்டி விகிதங்களைக் குறைக்கும் என கணிப்பாளர்கள் பரவலாக எதிர்பார்க்கின்றனர்.
ஆனாலும் மத்திய வங்கி எதிர்கால வட்டி விகித உயர்வுகளை நிராகரிக்கவில்லை.
கனடாவில் பணவீக்கம் கணிசமாக குறைந்துள்ளது.
பணவீக்கத்தின் வருடாந்த விகிதம் October மாதம் 3.1 சதவீதமாக பதிவானது.