கனடாவின் பெரும்பாலான பகுதிகளில் மிதமான, மழையுடன் கூடிய வானிலை இந்த குளிர்காலத்தில் எதிர்கொள்ளப்படும் என எதிர்வு கூறப்படுகிறது.
இந்த ஆண்டு நாடளாவிய ரீதியில் பெரும்பாலான பகுதிகளில் குளிர்காலம் வழக்கத்திற்கு மாறாக வெப்பமாகவும் மழையாகவும் இருக்கும் என எதிர்வு கூறப்படுகிறது.
சுற்றுச்சூழல் கனடாவின் சமீபத்திய தரவுகளின்படி இந்த எதிர்வு கூறல் வெளியானது.
மேற்கு, மத்திய கனடாவின் பெரிய பகுதிகளில் சராசரியை விட குறைவான பனிப்பொழிவு எதிர்வு கூறப்படுகிறது.
Yukon, Northwest Territories, Nunavut, Quebec ஆகிய பகுதிகளில் சராசரி அளவை விட அதிகமான பனி பொழிவு எதிர்வு கூறப்படுகிறது.
நாட்டின் ஏனைய பகுதிகளில் சராசரி நிலைகளில் பனிப்பொழிவு எதிர்வு கூறப்படுகிறது.
பனிப்பொழிவு குறைவாக இருக்கும் என முன்னறிவிக்கப்பட்ட பகுதிகள் அதிக மழைக்கு தயாராக இருக்க வேண்டும் எனவும் எச்சரிக்கப்படுகிறது.
Atlantic கனடா , Quebec மாகாணத்தின் சில பகுதிகள், வடக்கு Ontarioவின் சில பகுதிகள், Northwest பிரதேசங்களின் சில பகுதிகள், Nunavut ஆகிய இடங்களில் December, January, February முழுவதும் சராசரியை விட அதிக வெப்பநிலை எதிர்பார்க்கப்படுகிறது.