கனடிய தேர்தலில் வெளிநாட்டு தலையீடுகள் தொடர்பான பொது விசாரணை Liberal அரசாங்கம் ஆரம்பிக்கின்றது.
இந்த விசாரணைக்கு தலைமை தாங்கும் ஒரு நீதிபதியை அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
பல மாதங்கள் தொடர்ந்த ஆலோசனையின் பின்னர், Quebec மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி Marie-Josée Hogue இந்த விசாரணையை தலைமை தாங்கவுள்ளார்.
இந்த நியமனம் குறித்த உத்தியோகபூர்வ அறிவித்தல் வியாழக்கிழமை (07) வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விசாரணைக்கான விதிமுறைகள், காலக்கெடு குறித்து பொது பாதுகாப்பு அமைச்சர் Dominic LeBlanc அறிவிப்பார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த விசாரணை கனடிய தேர்தலில் சீனா தவிரவும் ஏனைய வெளிநாட்டுகளின் தலையீடுகள் குறித்து கவனம் செலுத்தும் என அரசாங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
2025ஆம் ஆண்டு திட்டமிடப்பட்டுள்ள பொது தேர்தலுக்கு முன்னதாக இந்த விசாரணையின் முடிவுகள்,பரிந்துரைகளை எட்டுவதற்கான இலக்குடன் நீதிபதி Marie-Josée Hogue செயல்படுவார் என கூறப்படுகிறது.