தொழிற்சங்கத்துடன் தற்காலிக ஒப்பந்தம் ஒன்றை எட்டியுள்ளதாக Metro தெரிவித்துள்ளது.
தொடர்ந்த Metro மளிகைக் கடை ஊழியர்கள் வேலை நிறுத்தத்திற்கு மத்தியில் இந்த ஒப்பந்தம் எட்டியுள்ளதாக அறிவிக்கப்பட்டது.
Toronto பெரும்பாக பகுதியில் உள்ள 27 மளிகைக் கடைகளில் வேலை நிறுத்தம் முன்னெடுக்கும் ஊழியர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கத்துடன் தற்காலிக ஒப்பந்தத்தை எட்டியுள்ளதாக Metro கூறுகிறது.
இந்த தற்காலிக ஒப்பந்தம் ஊழியர்களுக்கு சமர்ப்பிக்கப்படும்.
இந்த ஊழியர்கள் UNIFOR பொது தொழிற்சங்கத்தினால் பிரதிநிதித்துவப் படுத்தப்படுகின்றனர்.
Toronto பெரும்பாக பகுதியில் உள்ள மளிகை கடைகளில் 3,700க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் July 29 முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.