தேசியம்
செய்திகள்

Northwest பிரதேச காட்டுத்தீ கிழக்கு கனடாவிற்கு பரவும் வாய்ப்பு

Northwest பிரதேசங்களில் இருந்து காட்டுத்தீ காரணமாக ஏற்படும் புகை இந்த வார இறுதியில் கிழக்கு கனடாவிற்கு பரவ வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Northwest பிரதேசங்களில் எரியும் நூற்றுக் கணக்கான காட்டுத்தீ கனடா முழுவதும் உள்ள சமூகங்களுக்கு காற்றின் தரத்தை குறைக்கும் அபாயம் தோன்றியுள்ளது.

Northwest பிரதேசம் முழுவதும் 200க்கும் மேற்பட்ட காட்டுத்தீ தொடர்ந்தும் எரிந்து வருகிறது.

இதன் காரணமாக 20,000 மக்கள் வசிக்கும் Yellowknife உட்பட சில சமூகங்களில் வெளியேற்ற உத்தரவு அமுலில் உள்ளது.

இது வரை, Northwest பிரதேசத்தில் Prince Edward தீவை விட நான்கு மடங்கு அதிகமான நிலம் எரிந்துள்ளது.

காட்டுத்தீ காரணமாக ஏற்படும் புகை கிழக்கு நோக்கி நகர்கிறது.

இதன் காரணமாக கனடா முழுவதும் சுற்றுச்சூழல் கனடாவினால் சிறப்பு காற்றின் தர அறிக்கைகள் வெளியாகி வருகின்றன.

இது கனேடியர்களுக்கு உடல்நலப் பிரச்சினைகளின் அபாயத்தை அதிகரிக்கின்றது.

Saskatchewan, Manitoba, வடமேற்கு Ontario ஆகிய பகுதிகளுக்கு சுற்றுச் சூழல் கனடா சிறப்பு காற்றின் தர அறிக்கைகளை வியாழக்கிழமை (17) வெளியிட்டது.

காட்டுத்தீ புகை காரணமாக காற்றின் தரம் சில மணி நேரத்திற்குள் மாற்றமடையலாம் என சுற்றுச்சூழல் கனடாவின் அறிக்கை கூறுகிறது.

வெள்ளிக்கிழமை (18) மாலைக்குள் Ontario புகையால் மூடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த புகை சனிக்கிழமை (19) அதிகாலையில் New Brunswick மாகாணத்திற்குள் பரவக்கூடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts

ஒரு தேசமாக அணிதிரளக் கிடைத்திருக்கும் அரிய சந்தர்ப்பம்!

Lankathas Pathmanathan

Liberal – NDP ஒப்பந்தம்: Delivering for Canadians Now, A Supply and Confidence Agreement

Lankathas Pathmanathan

Conservative கட்சியின் புதிய தலைவரானார் Pierre Poilievre

Lankathas Pathmanathan

Leave a Comment