தேசியம்
செய்திகள்

சீனாவின் அங்கீகரிக்கப்பட்ட சுற்றுலாவுக்கான நாடுகளின் பட்டியலில் இருந்து கனடா நீக்கம்

சீனாவின் அங்கீகரிக்கப்பட்ட சுற்றுலாக் குழுக்களுக்கான சர்வதேச இடங்களின் பட்டியலில் இருந்து கனடா நீக்கப்பட்டுள்ளது.

கடந்த 10ஆம் திகதி வெளியிடப்பட்ட பட்டியலில் இருந்து கனடாவை நீக்குவதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இது கனடாவுக்கு எதிரான சீனாவின் வெளிப்படையான அரசியல் புறக்கணிப்பாக நோக்கப்படுகிறது.

இதனை கனடாவில் உள்ள சீன தூதரகம் ஒரு அறிக்கையில் உறுதிப்படுத்தியது.

இரண்டு நாடுகளுக்கும் இடையிலான சமீபத்திய அரசியல் பதட்டங்களை எதிர்க்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கனடாவில் உள்ள சீன தூதரகம் கூறுகிறது.

அண்மையில் கனடிய அரச தரப்பில் இருந்து பாரபட்சமான ஆசிய-விரோத எதிர்ப்பு கருத்துக்கள் வெளியாவது கணிசமாக அதிகரித்து வருவதாகவும் சீன தூதரகம் கூறியது

சீன குடிமக்களின் பாதுகாப்பு, சட்டபூர்வமான உரிமைகளை உறுதிப்படுத்துவதில் சீன அரசாங்கம் அதிக முக்கியத்துவம் அளிக்கிறது எனவும் இந்த முடிவு குறித்து கனடாவில் உள்ள சீன தூதரகம் விளக்கம் அளித்துள்ளது.

சீன குடிமக்கள் பாதுகாப்பான, நட்பான சூழலில் பயணம் செய்வதை உறுதிபடுத்தும் ஒரு நகர்வு இது எனவும் சீன தூதரகம் தெரிவித்தது

2018 ஆம் ஆண்டில், 757,000 சீனப் பயணிகள் கனடாவுக்கு வருகை தந்தனர்.

இவர்கள் 2 பில்லியன் டொலர்களை தமது சுற்றுலா காலத்தில் கனடாவில் செலவழித்ததாக புள்ளிவிபர திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related posts

COVID தளர்வு நடவடிக்கைகளை பிற்போடும் Alberta!

Gaya Raja

வார விடுமுறையில் தமிழர் தெரு விழா!

Lankathas Pathmanathan

முன்னறிவிப்பின்றி கனடா புதிய பயண கட்டுப்பாடுகளை விதிக்கக்கூடும்: பிரதமர் எச்சரிக்கை

Lankathas Pathmanathan

Leave a Comment