Yellowknife நகரில் இருந்து படிப்படியான வெளியேற்ற உத்தரவை Northwest பிரதேசங்களின் அதிகாரிகள் விடுத்தனர்.
Yellowknife நகரின் எல்லையை காட்டுத்தீ எட்டியுள்ள நிலையில் குடியிருப்பாளர்களை வெளியேறுமாறு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
காட்டுத்தீ நகரத்திற்கு வெளியே சுமார் 17 கிலோ மீட்டர் தொலைவில் எரிந்து வருவதாக புதன்கிழமை (16) மாலை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் Northwest பிரதேசங்களின் சுற்றுச்சூழல், காலநிலை மாற்ற அமைச்சர் Shane Thompson கூறினார்.
இந்த நிலையில் காட்டுத்தீ வார இறுதியில் நகரின் புறநகரை அடையும் சாத்தியம் உள்ளதாக அவர் எச்சரித்தார்.
Yellowknife நகரில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்ட ஒரு நாளின் பின்னர் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்த நிலையில் Northwest பிராந்திய முதல்வர் Caroline Cochrane புதன்கிழமை (16) பிரதமர் Justin Trudeauவுடன் உரையாடியுள்ளார்.
இந்த உரையாடலில் Northwest பிராந்தியத்திற்கு மத்திய அரசின் முழு ஆதரவும் இருப்பதாக பிரதமர் உறுதியளித்தார்.