உலகளாவிய fentanyl போதைப்பொருள் விநியோக திட்டத்தில் பங்கு வகித்த கனடியருக்கு 22 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கனேடிய சிறைச்சாலையில் இருந்து இந்த விநியோக திட்டம் செயல்படுத்தப்பட்டதாக தெரியவருகிறது.
Quebec மாகாணத்தை சேர்ந்த 43 வயதான ஒருவர் இந்த சிறைத் தண்டனையை எதிர்கொள்கிறார்.
இவர் 2021 இல் கனடாவில் இருந்து அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்பட்டு, கடந்த ஆண்டு தன் மீதான குற்றத்தை ஒப்புக் கொண்டார்.
இவர் மீது போதைப்பொருள் விநியோகம், பணமோசடி உட்பட்ட குற்றச்சாட்டுகள் பதிவானது.