கனடாவின் சில பகுதிகளில் எதிர்கொள்ளப்படும் மோசமான காற்றின் தரம் வார இறுதி வரை நீடிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
காட்டுத்தீயின் புகை, தெற்கு Quebec, கிழக்கு Ontarioவில் காற்றின் தரத்தை ஆரோக்கியமற்றதாக மாற்றியுள்ளதாக சுற்றுச்சூழல் கனடா தெரிவிக்கிறது.
Ontario, Quebec பகுதிகளுக்கு சுற்றுச்சூழல் கனடா சிறப்பு காற்று தர எச்சரிக்கைகளை வெளியிட்டுள்ளது.
கனடாவில் இந்த ஆண்டு இதுவரை சுமார் ஒன்பது மில்லியன் ஏக்கர் நிலம் காட்டுத்தீயால் எரிந்துள்ளது.
Quebec முழுவதும் சுமார் அரை மில்லியன் ஏக்கர் நிலம் காட்டுத்தீயால் எரிக்கப்பட்டது.
Ontarioவில் Ottawa, Belleville, Kingston ஆகிய நகரங்கள் மிக மோசமான காற்று மாசு அளவுகளை பதிவு செய்துள்ளன.
செவ்வாய்கிழமை (06) வரை Quebec, வடக்கு Ontarioவில் 200 காட்டுத்தீ எரிந்து வருவதாக தெரியவருகிறது.
இந்த காட்டுத்தீ புகையின் காரணமாக, அமெரிக்காவில் சில விமான சேவைகள் பாதிப்புகளை எதிர்கொண்டது.
சில விமானங்கள் தாமதங்களை எதிர்கொண்டதுடன், வேறு சில விமான சேவைகள் நிறுத்தப்பட்டன.