December 12, 2024
தேசியம்
ஆய்வுக் கட்டுரைகள்கட்டுரைகள்

Toronto நகர முதல்வர் பதவிக்கு போட்டியிடும் தமிழர்

Toronto நகர முதல்வர் பதவிக்கான இடைத் தேர்தலில் நூற்றுக்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

இந்த தேர்தல் குறித்த தொடர் கருத்து கணிப்புகளில் Olivia Chow முன்னணியில் உள்ளார்.

Josh Matlow, Ana Bailao, Mark Saunders ஆகியோர் அவரைத் தொடர்ந்த நிலையில் உள்ளனர்.

இதில் அதிகம் அறியப்படாத அரசியல்வாதிகளும் உள்ளனர். இவர்களில் இருவர் தமிழர்கள். இந்த தேர்தலில் வெற்றிபெற வாய்ப்பில்லை என்றாலும், இவர்கள் அரசியல் அரங்கிற்கு அழுத்தமான யோசனைகளைக் கொண்டு வருவார்கள் என பெரும்பாலான கருத்துக்கணிப்புக்கள் கூறுகின்றன.

நீங்கள் இதுவரை அறிந்திராத ஒரு நகர முதல்வர் வேட்பாளர் குறித்து தெரிந்து கொள்ளுங்கள்.

கிரி வடிவேலு

Liberal, NDP, Progressive Conservative கட்சி ஆகியவற்றுடன் இணைந்துள்ள பெருந்திரளான வேட்பாளர்களின் மத்தியில், கிரி வடிவேலு, “முதலாளித்துவ நெருக்கடிக்கான சோசலிச தீர்வுகள்” என்னும் ஒரு தீர்க்கமான உறுதிப்பாட்டை முன்வைக்கிறது.

சிறுவயதில் இலங்கையில் இருந்து கனடாவிற்கு குடிபெயர்ந்து தற்போது Scarboroughவில் வசிக்கும் கிரி வடிவேலு, Torontoவில் நகர முதல்வர் தவிக்கு போட்டியிடும் முதல் தமிழ்-கனடியர் என தன்னை அடையாளப் படுத்துகின்றார்.

“நாம் வாழப் பழகிவிட்ட முதலாளித்துவ அமைப்பிற்கு ஒரு சோசலிச மாற்றீட்டை நான் முன்வைக்க விரும்புகிறேன். அந்த அமைப்பு மக்களை விட இலாபத்தை முதன்மைப்படுத்துகிறது. எங்கள் அமைப்பு இலாபத்தை விட மக்களை முதன்மைப்படுத்துகிறது, மேலும் எம் நகரம் எதிர்கொள்ளும் நெருக்கடிகளைத் தீர்க்க புத்தாக்க யோசனைகளைக் கொண்டுவருகிறது,” என அவர் கூறியுள்ளார்.

“I want to put forward a socialist alternative to the capitalist system that we’re used to living in,” he said. “That system puts profit before people, whereas our system puts people before profit, and brings innovative ideas to solve the crises the city is facing.”

கிரி வடிவேலுவின் பிரசாரத்தில் மையப்படுத்தப்பட்டுள்ள பிரச்சினைகளில் ஒன்று வீடின்மை – homelessness.

கிரி வடிவேலு நகர முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டால், Torontoவின் மலிவு விலை வீட்டு வசதியை கணிசமாக அதிகரிக்கும் இலக்குடன், நகராட்சி தலைமையிலான கட்டுமானச் செயற்பணிகளை முன்வைக்கப் பணியாற்றுவார்.

“கட்டுமான முதலீட்டாளர்களுக்கு (developers) நாங்கள் பணம் கொடுக்கும்போது, அது சிக்கலைத் தீர்க்காது. இதில் நகராட்சி தலைமை வகிக்க வேண்டும்,” என்கிறார் கிரி வடிவேலு.

கிரி வடிவேலு இலவச பொது போக்குவரத்து வசதிகளிலும் காவல்துறைப் பாதீட்டை குறைப்பதிலும் நம்பிக்கை கொண்டுள்ளார்.

“வட அமெரிக்கா, அதன் சமூகங்களை மென்மேலும் அந்நியப்படுத்தும் முழுமையான முதலாளித்துவ அமைப்பைக் கொண்டுள்ளது. இவை அனைத்தும் இலாபம் என்னும் கண்ணோட்டத்தைக் கொண்டவை. அதைத்தான் நாங்கள் Torontoவில் மாற்றப் பார்க்கிறோம். நாங்கள் ஒன்றாக கூட்டணி அமைக்கப் போகிறோம்’’ என அவர் குறிப்பிட்டுள்ளார்.

“North America, more and more, is a completely capitalist system that alienates its communities. It’s all through the lens of profit,” he said. “And that’s what we’re going to change in Toronto. We’re going to build alliances together.”

Toronto நகர முதல்வர் இடைத்தேர்தல் எதிர்வரும் 26ஆம் திகதி நடைபெறவுள்ளது.

  • *Ramya Sethu, LJI Reporter

 

Related posts

மீண்டும் தமிழர்கள் வசம் வருமா ஏழாம் வட்டாரம்?

Lankathas Pathmanathan

நீங்கள் போதிப்பதை கொஞ்சம் பயிற்சியும் செய்து பாருங்கள்!

Gaya Raja

Paris Paralympics: இருபத்து ஒன்பது பதக்கங்களை வென்றது கனடா

Lankathas Pathmanathan

Leave a Comment