சீனாவின் வெளிநாட்டு தலையீட்டில் தானும் இலக்காகியுள்ளதாக NDP நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.
இந்த விடயத்தில் தனது நீண்டகால சந்தேகத்தை கனடாவின் உளவு நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளதாக புதிய ஜனநாயகக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் Jenny Kwan திங்கட்கிழமை (29) தெரிவித்தார்.
Hong Kongகில் மனித உரிமைகளுக்காகவும், சீனாவில் Uyghur முஸ்லிம் சிறுபான்மையினருக்காகவும் குரல் கொடுத்த தன்னை சீன அரசாங்கம் குறிவைத்ததாக அவர் கூறினார்.
கனேடிய பாதுகாப்பு புலனாய்வு சேவை கடந்த வெள்ளிக்கிழமை (26) ஒரு மணிநேரம் இந்த விடயம் குறித்து தனக்கு விளக்கமளித்ததாக அவர் தெரிவித்தார்.
2019 கனடிய பொது தேர்தலின் முன்னர் சீனாவால் குறிவைக்கப்பட்டதை கனடாவின் உளவு நிறுவனம் தன்னிடம் உறுதிப்படுத்தியதாக Jenny Kwan கூறினார்.
ஆனாலும், தனக்கு எதிராக முன்னெடுக்கப்படுவதாக கூறப்படும் நடவடிக்கைகளின் தன்மையை தன்னால் வெளியிட முடியாது என அவர் தெரிவித்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிரான அச்சுறுத்தல்கள் குறித்து ர பல ஆண்டுகளாக தகவல் பகிரப்படாதது கவலையளிக்கிறது எனவும் Jenny Kwan கூறினார்.