தேசியம்
ஆய்வுக் கட்டுரைகள்கட்டுரைகள்

பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதை பகிரங்கமாக வெளிப்படுத்திய Longueuil நகர முதல்வர்

முன்னாள் Parti Quebecois சட்டமன்ற உறுப்பினரால் தான் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதை Longueuil நகர முதல்வர் Catherine Fournier தற்போது பகிரங்கமாக வெளிப்படுத்தியுள்ளார்.

December 2016 இடைத்தேர்தல் வெற்றிக்குப் பின்னர் நம்பிக்கை நட்சத்திரமாக இருந்தவர் Catherine Fournier.

அவர் Quebecகின் தேசிய சட்டமன்றத்தில் Marie-Victorin தேர்தல் மாவட்டத்தை Parti Quebecois சார்பில் பிரதிநிதித்துவப்படுத்தினார். Catherine Fournier, தேசிய சட்டமன்றத்தின் இளைய உறுப்பினர் ஆவார்.  Quebecகின்  தேசிய சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட இளம் பெண்ணும் அவராவார். March 2019 இல் கட்சியை விட்டு வெளியேறிய Catherine Fournier, சுயேச்சை சட்டமன்ற உறுப்பினராக November 2021 வரை பதவி வகித்தவர்.
Quebecகின் தேசிய சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு முன்னர், Catherine Fournier நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்டார். 2015 பொது தேர்தலில் Bloc Québécois வேட்பாளராக Montarville தொகுதியில் அவர் போட்டியிட்டார். இந்த தேர்தலில் அவர் இரண்டாவது அதிக வாக்குகளை பெற்றார். அவர் November 2021 இல், Longueuil நகர முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார். Catherine Fournier, April மாதம் 7ஆம் திகதி 1992 ஆம் ஆண்டு பிறந்தவர்.

முன்னாள் Parti Quebecois சட்டமன்ற உறுப்பினரால் தான் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதை Catherine Fournier தற்போது பகிரங்கமாக வெளிப்படுத்தியுள்ளார்.
“இப்போது நான் பேசத் தேர்வு செய்த காரணம், எனது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்வதற்கே …..” என ஆரம்பித்து தனது தரப்பில் கருத்து தெரிவித்துள்ளார் Catherine Fournier.

“If I choose to speak now, it is to share my experience, to help other people benefit from what I have learned … hoping that something positive can finally emerge from these sad events.” – Catherine Fournier.

இருவரும் Parti Quebecois சட்டமன்ற உறுப்பினர்களாக இருந்தபோது, Catherine Fournier 2017இல் Harold LeBelலினால் பாலியல் வன்கொடுமைக்கு  உள்ளான குற்றச்சாட்டில் எட்டு மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

பாலியல் வன்கொடுமை புகார்தாரர்கள் அடையாளம் குறித்த நிலையான வெளியீட்டுத் தடையை நீக்குமாறு Catherine Fournier, Quebec உயர் நீதிமன்ற நீதிபதி Serge Francoeurரிடம் கடந்த March மாதம் நடந்த விசாரணையின் போது கேட்டுக் கொண்டார். இந்த கோரிக்கைக்கு April 6 ஆம் திகதி நீதிபதி Serge Francoeur ஒப்புதல் அளித்தார், இது April 18ஆம் திகதி நடைமுறைக்கு வந்தது.

2014 முதல் 2022 வரை சட்டமன்ற உறுப்பினராக இருந்த Harold LeBel இந்த பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டில் December 2020 இல் கைது செய்யப்பட்டார்.

பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட Harold LeBel

கடந்த January மாதம் 60 வயதான Harold LeBelலுக்கு எட்டு மாதங்கள் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். நடுவர் மன்றம் (jury) அவர் குற்றவாளி என முன்னர் அறிவித்தது. தவிரவும் அவருக்கு இரண்டு ஆண்டுகள் நன்னடத்தை தீர்ப்பு விதிக்கப்பட்டது. இதன் மூலம் பாதிக்கப்பட்டவரை தொடர்பு கொள்ள தடை விதிக்கப்பட்டு,  Harold LeBelலுக்கு 20 ஆண்டுகளுக்கு பாலியல் குற்றவாளியாக பதிவு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

Harold LeBelலுக்கு இந்த வாரம் parole வழங்கப்பட்டது.

தன் மீதான பாலியல் வன்கொடுமை தாக்குதலுக்குப் பின்னர் Catherine Fournier, இரண்டரை வருடங்கள் காவல்துறையில் புகார் செய்யவில்லை. Parti Quebecois முன்னாள் தலைவர் Andre Boisclair — 2020 இல் பாலியல் குற்றங்களுக்காக குற்றம் சாட்டப்பட்ட பின்னர் – தன் மீதான பாலியல் வன்கொடுமை குறித்து புகார் அளிக்க Catherine Fournier நம்பிக்கையைப் பெற்றார்.

இந்த விடயத்தில் Catherine Fournierக்கு ஆதரவான நிலைப்பாடு எடுக்காதது குறித்து Parti Quebecois தலைவர் Paul St-Pierre Plamondon சட்டமன்றத்தில் விளக்கமளித்தார்.

Related posts

ஆரம்பித்தது தேர்தல் பிரசாரம்: நீங்கள் தெரிந்திருக்க வேண்டியவை!

B2B – MR.BROWN: From Barrie to Brampton  

Lankathas Pathmanathan

COVID காரணமாக Brampton நகர Amazon பூர்த்தி மையம் மூடல் -பின்னணி என்ன?

Gaya Raja

Leave a Comment