தேசியம்
கட்டுரைகள்

Julie Payette என்னும் வேதனையளிக்கும் பாடம் தலைவர்களின் தற்குறிப்பு களையல்ல – பண்புகளைப் பாருங்கள்

கனடாவின் ஆளுநர் நாயகம் பதவியில் இருந்து Julie Payette விலகியது பலரும் ஆச்சரியப்படும் ஒரு விடயமாக இருக்கவில்லை. ஆளுநர் நாயகம் மாளிகையில் ஊழியர்களால் பணியிட துன்புறுத்தல் குற்றச்சாட்டுகள் குறித்து சுயாதீனமான மறுஆய்வு முடிந்ததைத் தொடர்ந்து இந்த பதவி விலகல் அறிவித்தல் வெளியானது.

தனது பதவி விலகல் குறித்து வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில், தனக்கு எதிராக முறையானகுற்றச்சாட்டுக்கள் அல்லது உத்தியோகபூர்வ குறைகள் எதுவும் பதிவு செய்யப்படவில்லை எனவும், தான் சரியான செயல்பாட்டில் வலுவான நம்பிக்கை கொண்டவர் எனவும் Payette கூறியிருந்தாலும், நாட்டின் நன்மைக்காக பதவி விலகுவதாகவும் அவர் கூறியிருந்தார்.

Gov.Gen. Julie Payette watches a livestream of the proceedings before reading the speech from the throne in the Senate chamber in Ottawa, Wednesday, Sept. 23, 2020. (Justin Tang/CP)

பிரதமர் Justin Trudeau, முன்னாள் விண்வெளி வீரரான Payetteயை 2017ஆம் ஆண்டில் ஆளுநர் நாயகத்தின் பதவிக்கு நியமித்தார். கனடாவின் 29வது ஆளுநர் நாயகமாக Payette பதவியேற்ற போது, “அவர் சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்தவர். தொலைக்காட்சியில் சர்வதேச பார்வையாளர்கள் முன்னிலையில் இரண்டு விண்வெளி விண்கலங்களில் பறந்தவர். அவருக்கு பிரச்சினை எழும் என நான் நினைக்கவில்லை,” என கனடாவின் முதல் பெண் விண்வெளி வீராங்கனையான Roberta Bondar உறுதிபடக் கூறினார். பெரும்பாலான கனேடியர்களும்
அவ்வாறே உணர்ந்தார்கள்.

Angus Reid நடத்திய வாக்கெடுப்பில் 55 சத வீதமான கனேடியர்கள் அவரது நியமனத்திற்கு ஒப்புதல் அளித்திருந்தனர், ஆனாலும் 14 சத வீதமானவர்கள் மட்டுமே
அவரின் நியமனத்தை நிராகரித்திருந்தனர்.

கடந்த January மாதம் 21ஆம் திகதி Payette பதவி விலகியபோது, ஆளுநர் நாயகத்தின்
அலுவலகத்திற்குள் இருக்கும் பணிச்சூழல் குறித்து மிகவும் எதிர்மறையான ஒரு நிலையை வெளியிட்டிருந்தது. ஆளுநர் நாயகம் மாளிகை குறித்த மதிப்பாய்வில் பங்கேற்றவர்களில் பாதிப்பேர் “நச்சு” (toxic) என்றும் “பகைமை” (hostile) என்றும் விபரிக்கும் பணி சூழலாக அது அமைந்திருந்தது.

எங்கள் பொது, தனியார், இலாப நோக்கற்ற நிறுவனங்களின் உயர் பதவிகளில் Payette போன்ற நச்சுத் தலைவர்கள் உள்ளனர் என்பது கனேடியர்களுக்கு கசப்பான உண்மையாகும். Statisticsகனடாவின் சமீபத்திய அறிக்கையின்படி, கனேடியர்களில் 32 சதவீதமானோர் கடந்த 2020 ஆம் ஆண்டில் தங்கள் பணியிடத்தில் துன்புறுத்தல்களை அனுபவித்ததாகக் கூறியுள்ளனர்.

Governor General Julie Payette takes part in the annual Inspection of the Ceremonial Guard at Rideau Hall in Ottawa on Monday, Aug. 20, 2018. THE CANADIAN PRESS/Sean Kilpatrick

இவர்களில் ஆண்கள் அனுபவிக்கும் 39 சத வீதமான துன்புறுத்தல்களுக்கும் பெண்கள்
அனுபவிக்கும் 32 சத வீதமான துன்புறுத்தல்களுக்கும் முகாமையாளர்களும்,
மேற்பார்வையாளர்களுமே பொறுப்பாளிகளாக உள்ளனர்.

நச்சுத்தன்மை கொண்ட முகாமையாளர்கள் ஒரு நிறுவனத்திற்கு பெரும் சுமையாக மாறுவார்கள். நிறுவனங்களுக்கும், பொதுமக்களுக்கும் இடையிலான உறவின் கொடுங்கனவாக மாறும் அபாயமும் இதன்மூலம் ஏற்படும் சாத்தியக்கூறுகள் உள்ளன.

இவை தவிரவும் அவர்கள் மேற்பார்வை செய்யும் பணியாளர்களுக்கு நீடித்த மன அழுத்தம், கோபம், நம்பிக்கை இழப்பு, குறைவான பணி திருப்தி ஆகியன ஏற்பட இவர்கள் வழிவகுக்கிறார்கள். இதனால் நிறுவன மட்டத்தில், பணியாளர்களின் மன உறுதியையும் உற்பத்தித் திறனையும் குறைத்து, காப்பீடுகளையும், பணியாளர் உதவித் திட்டங்களுக்கான செலவுகளையும் நச்சுத்தன்மை கொண்ட
முகாமையாளர்கள் அதிகரிக்கச் செய்கின்றனர்.

இந்த நச்சுத்தன்மை கொண்ட முகாமையாளர்களே பெரும்பாலான பணியாளர்கள் வெளியேறக் காரணமாகிறார்கள். 50சத வீதமான பணியாளர்கள் தமது வாழ்வின் ஒரு கட்டத்தில் “முகாமையாளர்களிடம் இருந்து விடுபட”வேலையை விட்டுச் சென்றதாக Gallup என்ற நிறுவனம் நடத்திய ஆய்வில் கண்டறிந்துள்ளது.

உற்பத்தி இழப்பு, ஆட்சேர்ப்பு செலவுகள் காரணமாக,
பணியாளர் ஒருவர் வெளியேறும் ஒவ்வொரு முறையும் கனேடிய நிறுவனங்கள் சராசரியாக 18,000 டொலர்களை செலுத்துகின்றன. இது நிறுவனங்களுக்கும் மிகப்பெரிய செலவை ஏற்படுத்துகிறது.

நச்சுத்தன்மை கொண்ட முகாமையாளர்கள் மிகவும் பரவலாக இருந்தால், அவர்களை பணியில் அமர்த்தி வைத்திருப்பதற்கான செலவுகள் மிக அதிகமாக இருந்தால், அவர்கள் ஏன் பணியமர்த்தப்படுகிறார்கள்? எவ்வாறு அவர்கள் தொடர்ந்தும் பதவிக்கு வருகிறார்கள்? அதற்கான எளிய பதில் எதுவுமில்லை. ஆனால், நட்சத்திர தகைமைகளையும் அடைவுகளையும் கொண்ட ஒரு தற்குறிப்பினை வைத்திருப்பது மட்டும் ஒரு திறமையான தலைவரை உருவாக்கும் என்று நம்பி நாம் அடிக்கடி பொறியில் சிக்குகின்றோம் என்று சொல்வது நியாயமானது.

மனிதவள புத்தகங்கள், சொற்பொழிவுகள், பெருநிறுவன பயிற்சிகளை பெருமளவில் நாம் செவிமடுக்க வேண்டும். மேலும், பேரார்வம், பணிவு, நெகிழ்த்திறன், சிறந்த கேள் தகைமை, பெருங்குற்றம் சாட்டவியலாத நேர்மையுள்ள வலுவான தலைவர்களை நாம் நியமிக்க வேண்டும்.

பரவலான படிவார்ப்பான ஒரு “சிறந்த தலைவர்” இல்லை எனும் வெளிப்படையான உண்மையை CEO Genome ஆய்வு வெளிப்படுத்தியது.17,000 நிர்வாகிகளிடம் மேற்கொள்ளப்பட்ட ஆழ்ந்த பகுப்பாய்வில், தலைமை நிர்வாக
அதிகாரிகளில் 7 வீதமானவர்கள் மாத்திரமே Ivy League பட்டதாரிகள் என கண்டறியப்பட்டது.

மூன்றில் ஒரு பகுதியினர் (வலுவான ஆளுமை,கவர் திறனுக்கு மாறாக) உள்முக
சிந்தனையாளர்களாகவுள்ளனர். மேலும், அவர்களில் 45 சத வீதமானவர்கள் தொழில் ரீதியான பிரச்சினைகளை எதிர்கொண்டவர்கள் (career mishaps). “சாதாரணமானவர்களே அசாதாரண வெற்றியை அடைகிறார்கள்” என்று அவர்கள் முடிவு செய்தனர்.

வலுவான செயல்திறனுடன் தொடர்புபடுத்தவில்லை என்றாலும் கூட, கவர் திறனும் நம்பிக்கையும் ஒரு தலைமைப் பாத்திரத்திற்கு பிரதான காரணிகளாக இருந்தன.
Trudeau அரசாங்கமும், பரந்துபட்ட கனேடியர்களும் Payetteடின் குறிப்பிடத்தக்க சாதனைகளை, ஓர் அறிவியலாளர், விமானி, விண்வெளி வீரர் – ஆறு மொழிகளை பேசத் தெரிந்த ஒருவர், Junoவால் தேர்ந்தெடுக்கப்பட்ட இசைக்கலைஞர் – என்பதாகவே பார்த்திருந்தால், சிலவேளை முன்னதாகவே நாம் அபாய நிலையை கவனித்திருப்போம்.

பின்னணி குறித்த சோதனையை செய்திருந்தால், ஊழியர்களை வாய்மொழி துஷ்பிரயோகம் செய்ததாக அளிக்கப்பட்ட முறைப்பாட்டை அடுத்து, 2016ஆம் ஆண்டில் Montreal Science Centreஇல் இருந்து Payette விலகியதை நாங்கள் கண்டுபிடித்திருப்போம். 2018ஆம் ஆண்டில் மூன்று மாதங்களில் அவரின் அலுவலகத்தில் இருந்து நிர்வாகிகள் ஐவர் விலகியதையும் Rideau
Hallஇல் மூன்று வருடங்களாக அவருடைய முன்னோடிகளில் மூவருக்கு சேவை செய்தவர் உட்பட 7 உதவி நிர்வாகிகளுடன் அவரின் அலுவலகம் செயற்பட்டதையும் நாம் கவனித்திருப்போம்.

அல்லது கனடா அரசாங்கத்தின் 2019 ஆம் ஆண்டு பொது சேவை ஊழியர் கணக்கெடுப்பில் (Public Service Employee Survey), 71 வீதமானவர்கள் தமது மேலாளர்களால் துன்புறுத்தப்பட்டதாக தெரிவித்த போதும், Rideau Hallஇன் சூழலைப் பற்றி மோசமாக விபரித்த போதும் நாங்கள் சற்று சுதாரித்திருப்போம்.

COVID பெருந்தொற்று கனேடியர்களின் மன நலத்தை கடுமையாகப் பாதித்திருக்கும் நிலையில் (ஒரு கணக்கெடுப்பின் படி, December மாதத்தில் ஆகக் குறைந்த புள்ளிகள் பதிவாகியுள்ளன), போதைப் பொருள் பாவனை (addiction) முன்னெப்பொழும் இல்லாதவாறு அதிகரித்துள்ள நிலையில், நச்சுத் தன்மை கொண்ட முதலாளிகள் அல்லது முகாமையாளர்களுக்கு வெறுமனே நாம் வாய்ப்பளிக்க முடியாது.

இந்த செய்தி கனேடிய நிறுவனங்களுக்கு பாடமொன்றைக் கற்றுக்கொள்ளும் வாய்ப்பாகவும் மாற்றத்திற்கான அழைப்பாகவும் அமையும் என நாங்கள் நம்புகின்றோம். வெறுமனே மக்களை விரும்புவதாகத் தோன்றும் தலைவர்களை தேர்ந்தெடுப்பதற்கும், நச்சுத் தன்மைக்கான பண்புகளை பெண்கள் கூட வெளிப்படுத்த முடியும் என்பதை ஒப்புக்கொள்வதற்கும் அப்பால் நாம் செல்ல வேண்டும்.

GG05-2017-0293-001 August 8, 2017 Rideau Hall, Ottawa, Ontario, Canada Julie Payette poses for her official photo in the Long Gallery at Rideau Hall, in Ottawa, Ontario, on August 8th, 2017, ahead of her installation ceremony as the 29th Governor General of Canada. Julie Payette pose pour sa photo officielle dans le Grand salon ˆ Rideau Hall ˆ Ottawa, en Ontario, le 8 aožt 2017, en amont de sa cŽrŽmonie dÕinstallation ˆ titre de 29e gouverneure gŽnŽrale du Canada. Credit: Sgt Johanie Maheu, Rideau Hall, OSGG

துன்புறுத்தல்களையும் அதனால் ஏற்படும் விளைவுகளையும் நாம் தலைவர்களுக்கும்,
பணியாளர்களுக்கும் கற்றுக்கொடுக்க வேண்டும். பணியாளர்கள் தாம் தவறாக
நடத்தப்படுவதையும் தமது பிரச்சினைகளையும் பழிவாங்கப்படுவோம் எனும் அச்சமின்றி அநாமதேயமாக வெளிப்படுத்தக்கூடிய வழியை ஏற்படுத்திக் கொடுத்து அதிகார ஏற்றத்தாழ்வுகளை குறைக்க வேண்டும். மேலதிகாரிகள், சகாக்கள் அல்லது மனித வள பணியாளர்கள் ஆகியோரும் கருத்துக்களை வழங்கும் நிலை இருக்கவேண்டும்.
எல்லாவற்றுக்கும் மேலாக, மின்னுகின்ற எல்லா தற்குறிப்புகளும் பொன்னானவை எனும் தவறான தீர்மானத்திற்கு நாம் வந்து விட முடியாது.

பத்மன் பத்மநாதன்

Related posts

மிருகத்தமான – கோழைத்தனமான – வெட்கக்கேடான வன்முறைச் சம்பவம்!

Gaya Raja

தேசிய நாயகன் கருணா வின்சென்ற்

thesiyam

மரபுத் திங்களும் …… மாமிசப் பொங்கலும்  ……

thesiyam

Leave a Comment