தேசியம்
கட்டுரைகள்கனேடிய தேர்தல் 2021

2021 கனேடிய தேர்தல்: சமூக ஊடகங்களின் ஆதிக்கம்!

இந்தத் தேர்தல் அவசியமற்றதாக இருக்கலாம். ஆனால் எதிர்வரும் நாட்களில் தலைவர்கள்,
அவர்களின் கட்சிகள், நாட்டில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் என நாம் வாக்காளர்களாக அதிகம்
கற்றுக் கொள்ள உள்ளோம் – குறிப்பாக சமூக வலைத்தளங்கள் ஊடாக.

சமூக ஊடகங்கள் அனைத்தும் – அரசியல் கட்சிகளும் தேர்தலில் பயன்படுத்த வேண்டிய ஒன்றாகியுள்ளது. குறிப்பாக பல இளம் கனேடியர்கள் தங்கள் தொலைபேசிகளில் சமூக ஊடகங்களுடன் “ஒட்டிக்கொண்டு ” இருப்பதை அனைவரும் அறிவர். இந்த நிலையில் இளம் வாக்காளர்களை சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி கட்சித் தலைவர்கள் தொடர்பை ஏற்படுத்தி தமது தேர்தல் பிரசாரத்தை முன்னெடுக்கின்றனர்.

ஒவ்வொரு தேர்தலிலும், அதிகமான சொந்த சமூக ஊடக பயனர்கள் 18 வயதை அடைந்து
வாக்களிக்க தகுதி பெறுகின்றனர். இதன் எதிரொலியாக பெருகிய முறையில், கனேடிய
அரசியல்வாதிகள் தங்கள் பிரச்சாரங்களை பல்வேறு சமூக ஊடக தளங்களின் சக்தியைப்
பயன்படுத்தி மேற்கொள்கின்றனர்.

கனேடிய பொது தேர்தல் இப்போது TikTokகில் பரபரப்பான செய்தியாகும். கட்சித் தலைவர்களின் hashtagக்குச் சென்றால், அது மில்லியன் கணக்கான பார்வைகளைக் கொண்டிருப்பதை நீங்கள் காண்பீர்கள் என்கிறார்கள் சந்தைப்படுத்தல் நிபுணர்கள்.

இளம் வாக்காளர்களுக்கு சமூக ஊடகங்கள் ஊடாக வலைவிரிக்கும் போட்டியில் முன்னிலையில் இருக்கும் இன்றைய கனேடிய அரசியல் தலைவர் NDPயின் Jagmeet Singh. தேர்தலில் போட்டியிடும் அரசியல் தலைவர்களில் இளம் வயதினரான Singh சமூக வலைத்தளங்கள் ஊடாக இளைஞர்களை இலகுவாக கவர்கின்றார். குறிப்பாக TikTokகில், Singh தனது தேர்தல் பிரச்சாரத்தின் மூலம் ஏராளமான இளம் வாக்காளர்களை கவர்ந்து வருகிறார்.

ஏனைய பிரதான கட்சித் தலைவர்கள் எவரும் தற்போது TikTokகில் இல்லை என்றாலும், அவர்கள்Twitter, Instagram போன்ற பிற சமூக ஊடக தளங்களில் செயற்பாட்டில் உள்ளனர். உதாரணமாக,Liberal கட்சி தலைவர் Justin Trudeau, கொள்கை அறிவிப்புகளுக்கு பின்னர் Instagramமில் தோன்றுவதை காணமுடிகின்றது.

Conservative கட்சி தலைவர் Erin O’Toole இரண்டு நிமிடங்களில் அல்லது அதற்கு குறைவான ஒளித்தொகுப்புகளாக தனது வாக்குறுதிகளை விவரித்து Twitterரில் வெளியிடுவதை வழக்கமாககொண்டுள்ளார். இந்த ஒளித் தொகுப்புகளில் கனேடிய தேசிய கொடிகள் கட்டாயமாக இடம்பிடித்திருப்பது ஒன்றும் வியப்புக்குரியதல்ல.

பசுமைக் கட்சித் தலைவி Annamie Paul, அதிக இளம் வாக்காளர்களை Instagram போன்ற சமூக
ஊடகங்களின் ஊடாக கவர முயற்சிக்கிறார். இவர் சமூக ஊடகங்களில் தனது கட்சியின்
கொள்கைகளை முன்னிலை படுத்துவதிலும் ஏனைய கட்சித் தலைவர்களை விமர்சிப்பதிலும்கவனம் செலுத்துகிறார்.

சமூக ஊடகங்களின் சரியான பயன்பாடு கட்சித் தலைவர்கள் இளம் வாக்காளர்களின் கவனத்தைப்பெறவும், கனேடியர்களுடன் தொடர்பு கொள்ளவும் பெரிதும் உதவுகின்றன. குறிப்பாக COVIDதொற்றின் நான்காவது அலையின் மத்தியில் தேர்தல் பிரச்சாரம் நடைபெறும் நிலையில் சமூகஊடகங்கள் புதிய பிரச்சார மேடையாக அரசியலில் வழிசமைக்கிறது.

சபரி கிருபாகரன்

Related posts

ஹரி ஆனந்தசங்கரியின் தேர்தல் பரப்புரை ஞாயிற்றுக்கிழமை உத்தியோகபூர்வமாக ஆரம்பம்!

Gaya Raja

மிருகத்தமான – கோழைத்தனமான – வெட்கக்கேடான வன்முறைச் சம்பவம்!

Gaya Raja

Toronto இடைத்தேர்தல் Justin Trudeauவின் அரசியல் எதிர்காலத்திற்கான வாக்கெடுப்பு?

Lankathas Pathmanathan

Leave a Comment