கனடிய பொது தேர்தல்களில் வெளிநாட்டு தலையீடுகள் தொடர்பான விசாரணை குறித்த கோரிக்கையை எதிர்க்கட்சிகள் தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்றன.
கனேடிய விவகாரங்களில் பரந்த அளவில் சீனாவின் குறுக்கீடுகள் குறித்த குற்றச்சாட்டுகளின் மத்தியில் விசாரணை குறித்த அழைப்புகள் தொடர்கின்றன.
இந்த விடயத்தில் மத்திய அரசு பொது விசாரணையை நடத்த வேண்டும் என்ற நாடாளுமன்றக் குழுவின் அழைப்பை உறுதி செய்யும் வகையில் வியாழக்கிழமை (23) நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்தனர்.
“ஒப்புதல் தீர்மானம்” என்று அழைக்கப்படும் ஒரு வாக்கெடுப்பை NDP, நாடாளுமன்றத்தில் வலியுறுத்தியது.
இந்த தீர்மானம் 172 க்கு 149 என்ற வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
NDP, Conservative, Bloc Quebecois, பசுமை கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த தீர்மானத்திற்கு ஆதரவாகவும் Liberal கட்சி எதிராகவும் வாக்களித்தது.