தேசியம்
செய்திகள்

ஆரம்பமானது அமெரிக்க அதிபரின் முதலாவது கனடிய பயணம்

அமெரிக்க அதிபர் Joe Biden கனடாவுக்கான தனது முதலாவது அதிகாரபூர்வ பயணத்தை ஆரம்பித்தார்.

வியாழக்கிழமை (23) மாலை அமெரிக்க அதிபரின் Air Force 1 விமானம் Ottawa வான்படை தளத்தை வந்தடைந்தது.

ஒரு புதிய அமெரிக்க அதிபரின் முதல் வெளிநாட்டு பயணங்களில் கனடா முதலாவதாக அமைவது வழக்கமாகும்.

ஆனாலும் COVID காரணமாக Joe Bidenன் கனடிய வருகை தாமதமானது.

அமெரிக்க அதிபரின் கனடாவுக்கான பயணம் 27 மணி நேரம் நீடிக்க உள்ளது.

அவர் வெள்ளிக்கிழமை (24) இரவு வரை தலைநகர் Ottawaவில் தங்கியிருக்க உள்ளார்.

அமெரிக்க அதிபரையும் அவரது துணைவியாரையும் ஆளுநர் நாயகம் Mary Simon, துணைப் பிரதமர் Chrystia Freeland, வெளியுறவு அமைச்சர் Melanie Joly உட்பட கருவூல வாரியத் தலைவர், கனடாவின் அமெரிக்க தூதர் ஆகியோர் அடங்கிய குழு விமான நிலையத்தில் வரவேற்றது.

பிரதமர் Justin Trudeau தனது மனைவியுடன் அமெரிக்க அதிபரையும் அவரது துணைவியாரையும் வியாழன் இரவு Ottawaல் சந்தித்தார்.

வெள்ளிக்கிழமை அமெரிக்க அதிபர் கலந்து கொள்ளும் பொது நிகழ்ச்சிகள் திட்டமிடப்பட்டுள்ளது.

Joe Biden வெள்ளியன்று கனடிய நாடாளுமன்றத்தில் உரையாற்ற ஏற்பாடாகியுள்ளது.

Related posts

Albertaவில் காட்டுத்தீயின் எண்ணிக்கை குறைந்தது

Lankathas Pathmanathan

இந்த வாரம் 7.1 மில்லியன் தடுப்பூசிகளை கனடா பெறுகின்றது!

Gaya Raja

Ontarioவில் மீண்டும் இரண்டாயிரத்துக்கும் அதிகமான தொற்றுக்கள்!

Gaya Raja

Leave a Comment

error: Alert: Content is protected !!