தேசியம்
செய்திகள்

Arctic கடற்பகுதியில் சீனாவின் கண்காணிப்பை நிறுத்தியுள்ளோம்: கனேடிய இராணுவம்

Arctic கடற்பகுதியில் சீனாவின் கண்காணிப்பை கண்காணித்து, நிறுத்தியுள்ளதாக கனேடிய இராணுவம் தெரிவித்துள்ளது.

கனேடிய வான்வெளி, நீர்நிலைகளில் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் சீனாவின் சமீபத்திய முயற்சிகள் குறித்து அறிந்திருப்பதாக தேசிய பாதுகாப்புத் துறை, கனேடிய ஆயுதப் படைகள் உறுதிப்படுத்துகின்றன.

LIMPID என்ற நடவடிக்கையின் கீழ் 2022ஆம் ஆண்டு முதல் கனேடிய நிலப்பரப்பைக் கண்காணிக்கும் சீனாவின் முயற்சிகளை ஆயுதப் படைகள் கண்காணித்து, நிறுத்தியதாக கனேடிய ஆயுதப் படைகளின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

இந்த நிலையில் சீனா ஒரு பெரும் சீர்குலைக்கும் சக்தியாக உள்ளது என கனடிய வெளியுறவு அமைச்சர் Melanie Joly கூறினார்.

கனடாவின் Arctic இறையாண்மையில் வெளிநாட்டு தலையீடுகள் குறித்த அதிகரித்த அச்சுறுத்தல்கள் மத்தியில் வட அமெரிக்க வான்பரப்பை பாதுகாப்பதற்கு கனடா NATO உடன் இணைந்து செயல்படும் எனவும் அவர் கூறினார்.

Related posts

அகதிகள் மீள்குடியேற்ற திட்டத்திற்கு மேலதிக நிதியுதவி

Lankathas Pathmanathan

தற்காலிக குடியேற்றவாசிகள் தொடர்பில் வாக்கெடுப்பு நடத்த தயாராகும் Quebec?

Lankathas Pathmanathan

கனடியர்களுக்கு செலுத்தப்படும் COVID தடுப்பூசிகள்

Lankathas Pathmanathan

Leave a Comment