December 12, 2024
தேசியம்
செய்திகள்

கடந்த காலாண்டில் கனேடிய பொருளாதாரத்தில் வளர்ச்சி இல்லை

2022ஆம் ஆண்டிம் நான்காம் காலாண்டில் கனேடிய பொருளாதாரம் வளர்ச்சி எதனையும் பதிவு செய்யவில்லை.

2022 ஆம் ஆண்டின் நான்காவது காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் எந்த மாற்றமும் இல்லை என கனடிய புள்ளிவிவரத் திணைக்களம் தெரிவித்தது.

ஐந்து தொடர்ச்சியான காலாண்டு பொருளாதார வளர்ச்சியின் பின்னர், இந்த அறிவித்தல் செவ்வாய்க்கிழமை (28) வெளியானது.

Decemberரில் பொருளாதாரம் 0.1 சதவீதம் சுருங்கியது என இந்த அறிக்கை கூறுகிறது.

புள்ளிவிவரத் திணைக்களம் தனது ஆரம்ப மதிப்பீட்டில், கடந்த காலாண்டில் 1.6 சதவீத வருடாந்த வளர்ச்சியை கணித்திருந்தது.

ஆனால் January மாதத்தில் பொருளாதாரம் மீண்டும் வளர்ச்சி பெற்று, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.3 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்யும் என புள்ளிவிவரத் திணைக்களம் எதிர்வு கூறுகிறது.

Related posts

Peel பிராந்திய காவல்துறை தலைவர் இலங்கைக்கு பயணம்

Lankathas Pathmanathan

கனடிய தூதர் ஹெய்ட்டியில் தொடர்ந்து தங்கி இருப்பார்?

Lankathas Pathmanathan

தமிழ்க் குயர் கூட்டிணைவின் ‘ஊர்’ கண்காட்சி

Lankathas Pathmanathan

Leave a Comment