கனேடிய வெளியுறவு அமைச்சர் Melanie Joly, உக்ரைன் ஜனாதிபதியை சந்தித்தார்.
இந்த சந்திப்பு செவ்வாய்க்கிழமை உக்ரைன் தலைநகர் கீவ்வில் நடைபெற்றது.
இன்றைய சந்திப்பின் போது உக்ரைனுக்கு கனேடிய அரசாங்கமும் மக்களுக்கும் வழங்கும் ஆதரவுக்கு உக்ரைன் ஜனாதிபதி நன்றி தெரிவித்தார்.
கனடா உலக அமைதி மாநாட்டை நடத்துவதற்கான சாத்தியம் குறித்து இருவரும் கலந்துரையாடினர்
பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த பயணம் குறித்த விபரங்களை கனடிய வெளிவிவகார அமைச்சரின் அலுவலகம் வெளியிடவில்லை.