Toronto நகர முதல்வர் பதவி விலகுவதாக கடந்த வெள்ளிக்கிழமை திடீரென அறிவித்தை தொடர்ந்து Toronto நகரில் ஒரு நிச்சயமற்ற வாரம் ஆரம்பிக்கிறது.’
Toronto நகர முதல்வர் பதவியில் இருந்து John Tory விலகுகிறார்.
COVID தொற்று காலத்தில் தனது அலுவலக ஊழியர் ஒருவருடன் உறவில் இருந்ததை ஏற்றுக்கொண்ட பின்னர் நகர முதல்வர் பதவியில் இருந்து விலகுவதாக John Tory கடந்த வெள்ளிக்கிழமை (10) இரவு அறிவித்தார்.
Toronto நகர முதல்வர் பதவியில் இருந்து John Tory விலகுகிறார்.
இந்த அறிவித்தலினால் நகர முதல்வர் அலுவலகம், நகரின் 2023 வரவு செலவு திட்டம் ஆகிய இரண்டு குறித்த கேள்விகளை எழுந்துள்ளன.
Toronto நகரின் சாத்தியமான வரவு செலவுத் திட்டத்தை வடிவமைப்பதில் John Tory முக்கிய பங்கு வகித்தவர்.
ஆனாலும் அவரது பதவி விலகல் அறிவித்தலை தொடர்ந்து இந்த வரவு செலவுத் திட்டத்தை நகர சபை உறுப்பினர்கள் மீண்டும் விவாதித்து மறுவடிவமைக்க வாய்ப்புள்ளது.
John Tory தனது பதவி விலகல் கடிதத்தை சமர்ப்பித்து நகர சபை அவரது பதவி வெற்றிடமாக உள்ளதாக அறிவிக்கும் வரை அவர் நகர முதல்வராக உள்ளார்.
இந்த செயல்முறை இதுவரை நடைபெறவில்லை.
John Tory எப்போது தனது பதவி விலகல் கடித்தை சமர்பிப்பார் அல்லது Toronto நகரில் இடைக்கால முதல்வராக யார் செயல்படுவார்கள் என்பது குறித்து இதுவரை உறுதியான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
ஒரு இடைத்தேர்தல் நடைபெறும் வரை நகர முதல்வர் பதவியை துணை நகர முதல்வர் Jennifer McKelvie வகிப்பார் என பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது.