தேசியம்
செய்திகள்

COVID தொற்றின் மூன்றாவது அலையை Ontario எதிர்கொள்கிறது ; மாகாண மருத்துவமனை சங்கம்

COVID தொற்றின் மூன்றாவது அலையை Ontario எதிர்கொள்வதாக மாகாண மருத்துவமனை சங்கம் கூறுகின்றது.தொற்றின் புதிய தரவுகள் மாகாணத்தில் அதிகரித்து வருவதாக நேற்று திங்கள்கிழமை வெளியான tweet ஒன்றில் Ontario மருத்துவமனை சங்கம் தெரிவித்துள்ளது

இதன் மூலம் தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்படும் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் மருத்துவமனை சங்கம் கூறியுள்ளதுமருத்துவமனையில் அதிகமாக தொற்றாளர்கள் அனுமதிக்கப்படுவதை தடுக்க பொது சுகாதார நடவடிக்கைகளை வலுவாக பின்பற்றுவது அவசரமாக தேவைப்படுவதாக மருத்துவமனை சங்கம் தெரிவித்தது.

Ontario மாகாணம் மூன்றாவது அலையின் ஆரம்பத்தில் உள்ளதாக Ontarioவின் தலைமை மருத்துவ அதிகாரி வைத்தியர் David Williams தெரிவித்தார்ஆனாலும் Ontario மாகாணம் மூன்றாவது அலையை எதிர்கொள்கின்றதா என்பதை இப்போது கூற முடியாது என Torontoவின் சுகாதார மருத்துவ அதிகாரி வைத்தியர் Eileen de Villa தெரிவித்தார்.

Related posts

ஆயிரக்கணக்கான கனேடியர்களுக்கு மின்சாரம் இல்லாத நிலை தொடர்கிறது

Lankathas Pathmanathan

CSIS பணியிட துன்புறுத்தல் குற்றச்சாட்டுகள்  ஏற்றுக்கொள்ள முடியாதவை

Lankathas Pathmanathan

அவசரகாலச் சட்டத்தைப் பயன்படுத்துவதை நிறுத்த அரசாங்கம் நடவடிக்கை

Lankathas Pathmanathan

Leave a Comment