Toronto நகர முதல்வராகும் Jennifer McKelvie?

Toronto நகர முதல்வர் பதவியை நகர சபை உறுப்பினர் Jennifer McKelvie பொறுப்பேற்கும் சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ளன. COVID தொற்று காலத்தில் தனது அலுவலக ஊழியர் ஒருவருடன் உறவில் இருந்ததை ஏற்றுக்கொண்ட பின்னர் நகர முதல்வர் பதவியில் இருந்து விலகுவதாக John Tory வெள்ளிக்கிழமை (10) இரவு அறிவித்தார். Toronto நகரின் துணை முதல்வராக Scarborough Rouge Park தொகுதியின் நகரசபை உறுப்பினர் Jennifer McKelvie பதவி வகிக்கிறார். இந்த நிலையில் Toronto நகர சட்டத்தின் கீழ், துணை நகர முதல்வர் Jennifer McKelvie, இடைத் தேர்தல் நடைபெறும் வரை பணியை ஏற்க முடியும். Jennifer McKelvie சில மாதங்கள் நகர முதல்வர் பதவியில் இருக்க வாய்ப்புள்ளது, Toronto நகரச் சட்டத்தின்படி, இடைத் தேர்தல் முறையாக அறிவிக்கப்பட்ட பின்னர் வேட்பாளர்கள் தங்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய குறைந்தபட்சம் 30 நாட்களும் அதிகபட்சம் 60 நாட்களும் அவகாசம் அளிக்க வேண்டும். தேர்தல் வாக்களிப்பு தினம் 45 நாட்கள் கழித்து இடம்பெறும். Scarborough Rouge Park தொகுதியின் நகர சபை உறுப்பினரான Jennifer McKelvie 2018ஆம் ஆண்டு முதலில் தெரிவானார். 2022ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் மீண்டும் வெற்றிபெற்ற அவர் தனது இரண்டாவது பதவிக்காலத்தை ஆரம்பித்தார். 2018 இல், 154 வாக்குகள் வித்தியாசத்தில் Jennifer McKelvie தமிழரான நீதன் சானை வெற்றிபெற்றார். ஆனால் கடந்த Octoberரில் நடைபெற்ற தேர்தலில் அவர் Scarborough Rouge Park தொகுதியில் 72 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றார். அதன் பின்னர் கடந்த November மாதம் அவர் John Toryயின் சட்டப்பூர்வ துணை நகர முதல்வராக மேயராக நியமிக்கப்பட்டார். Download WordPress Themes FreeDownload Nulled WordPress ThemesDownload WordPress Themes FreeFree Download WordPress Themesudemy free downloaddownload samsung firmwarePremium WordPress Themes Downloadudemy paid course free download