தேசியம்
செய்திகள்

தமிழ் சமூக மையத்தின் திட்டத்தை முன்னோக்கி நகர்த்துவது குறித்த ஆலோசனை பொறிமுறை ஆரம்பம்!

தமிழ் சமூக மையத்தின் திட்டத்தை எவ்வாறு முன்னோக்கி நகர்த்துவது என்பதைத் தீர்மானிக்கும் ஆலோசனை பொறிமுறை ஒன்றை சமூக மைய இயக்குநர் குழு ஆரம்பித்துள்ளது.

இதற்காக இந்த மாதம் ஒரு புதிய இணைய மூலம் கலந்தாய்வு முன்னெடுக்கப்படுகிறது.

தமிழ் சமூக மையத்தின் இயக்குநர் குழு இந்தத் திட்டம் குறித்த நிலவர அறிவிப்பை திங்கட்கிழமை வெளியிட்டது.

அதிகரித்த கட்டுமான வரவு செலவுத் திட்டத்துடன், தமிழ் சமூக மையத்தின் திட்டத்தை எவ்வாறு முன்னோக்கி நகர்த்துவது என்பதைத் தீர்மானிக்க இணைய மூலம் கலந்தாய்வு எதிர்வரும் 20ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

தவிரவும் எதிர்வரும் 21ஆம் திகதி ஒரு பொதுக் கூட்டத்தை நடத்தவும் தமிழ் சமூக மையத்தின் இயக்குநர் குழு முடிவு செய்துள்ளது.

Related posts

பழங்குடி பாடசாலையில் மீட்கப்பட்ட 215 குழந்தைகளின் எச்சங்கள்!

Gaya Raja

மத்திய அரசின் குறைந்தபட்ச ஊதியம் உயர்கிறது!

விமானப் போக்குவரத்து கணினி செயலிழப்பால் பாதிப்பு!

Lankathas Pathmanathan

Leave a Comment