February 22, 2025
தேசியம்
செய்திகள்

OPP அதிகாரியின் மரணம் குறித்த குற்றச்சாட்டுகள் பதிவு

Ontario மாகாண காவல்துறை அதிகாரியின் மரணம் குறித்த குற்றச்சாட்டுகள் இருவர் மீது சுமத்தப்பட்டுள்ளது.

செவ்வாய்க்கிழமை (27) மாலை Hagersville நகருக்கு அருகில் OPP அதிகாரி Grzegorz Pierzchala சுடப்பட்டார்.

28 வயதான அவர் உயிருக்கு ஆபத்தான காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

சிறிது நேரத்தில் அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.

இந்த சம்பவம் குறித்த குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டனர்.

30 வயதான பெண், 25 வயதான ஆண் ஆகிய இரண்டு சந்தேக நபர்களும் புதன்கிழமை (28) மாலை Cayuga நீதிமன்றில் நிறுத்தப்பட்டனர்.

25 வயதான Randall McKenzie, 30 வயதான Brandi Stewart-Sperry ஆகியோர் மீது முதல் தரக் கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

அவர்கள் இருவரும் மீண்டும் January மாதம் 17ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.

OPP அதிகாரியின் மரணத்திற்கு பிரதமர் Justin Trudeau, Ontario முதல்வர் Doug Ford, Haldimand County நகர முதல்வர் உட்பட பலரும் தமது இரங்கலை தெரிவித்துள்ளனர்.

கடந்த September மாதத்தின் பின்னர் கனடாவில் பலியான ஆறாவது காவல்துறை அதிகாரி இவராவார்.

Related posts

வெளிநாட்டு தலையீடு விசாரணையை ஆரம்பிப்பதற்கு எதிர்க்கட்சிகளின் ஆதரவு?

Lankathas Pathmanathan

Saskatchewan பாடசாலை கத்திக் குத்தில் இருவர் காயம்

Lankathas Pathmanathan

நீதித்துறை அமைச்சரின் நாடாளுமன்ற செயலாளரானார் ஹரி ஆனந்தசங்கரி

Lankathas Pathmanathan

Leave a Comment