தேசியம்
செய்திகள்

CRA குறித்த புகார்கள் 70 சதவீதம் அதிகரிப்பு

வரி செலுத்துவோர் கண்காணிப்பு குழுவிடம் முன்வைக்கப்பட்ட கனடா வருவாய் முகமைத் துறை குறித்த புகார்களின் எண்ணிக்கை இரண்டு மடங்குக்கு மேல் அதிகரித்துள்ளது.

தொற்று நோய்க்கு முந்தைய ஆண்டை விட CRA குறித்த புகார்கள் 70 சதவீதம் அதிகரித்துள்ளது.

இவற்றில் பெரும்பாலானவை COVID உதவி திட்டங்களை பெறுவதில் ஏற்படும் தாமதங்கள் தொடர்பானவை என கூறப்படுகிறது.

40 சதவீதமான புகார்கள் உதவி திட்டங்களை பெறுவதில் ஏற்படும் தாமதங்கள் தொடர்பானவை என தெரியவருகிறது.

CRA குறித்து மொத்தம் 3,847 புகார்கள் பதிவானதாக வரி செலுத்துவோர் கண்காணிப்பு குழு கூறியது.

CRA தொடர்பு மையங்களில் வழங்கப்படும் சேவையின் தரம் குறித்தும் அதிக எண்ணிக்கையான புகார்கள் பதிவாகியுள்ளது.

Related posts

அமெரிக்க பொருட்கள் மீது கனடா 25 சதவீத வரி!

Lankathas Pathmanathan

வளர்ச்சியடையும் கனேடிய பொருளாதாரம்!

Gaya Raja

தேசிய போர் நினைவுச் சின்னம் மீதான இழிவுபடுத்தலை கண்டித்தார் அமைச்சர் ஆனந்த்!

Lankathas Pathmanathan

Leave a Comment