தேசியம்
செய்திகள்

கனேடிய ஆயுதப் படைகளின் கலாச்சாரத்தை சீர் திருத்தும் புதிய திட்டம்

கனேடிய ஆயுதப் படைகளின் கலாச்சாரத்தை சீர் திருத்துவதற்கான புதிய திட்டம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

பாதுகாப்பு அமைச்சர் அனிதா ஆனந்த் செவ்வாய்க்கிழமை (13) இந்த புதிய திட்டத்தை வெளியிட்டார்.

இன்று நாடாளுமன்றத்தில் தனது புதிய திட்டத்தை அமைச்சர் வெளியிட்டார்.

கனேடிய ஆயுதப் படைகளில் நிகழ்வது ஒரு பாலியல் துஷ்பிரயோக நெருக்கடி என வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

கனடாவின் முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி வழங்கிய பரிந்துரைகளை நிவர்த்தி செய்யுமாறு தேசிய பாதுகாப்புத் துறை, கனேடிய ஆயுதப் படைகளுக்கு தான் உத்தரவிட்டதாக ஆனந்த் கூறினார்.

கனேடிய ஆயுதப் படைகள் ஆட்சேர்ப்பு சவால்களை எதிர் கொள்வதாகவும் அமைச்சர் ஆனந்த் கூறினார்.

Related posts

ISIS முகாமில் இருந்து கனடிய குடும்பம் நாடு திரும்புகிறது

Lankathas Pathmanathan

கனேடியர்களில் ஐம்பது சதவீதத்தினர் COVID தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்

British Colombiaவில் தொடரும் அவசர கால நிலை

Lankathas Pathmanathan

Leave a Comment