மீண்டும் வட்டி வீத அதிகரிப்பு குறித்த முடிவுகள் தரவு சார்ந்ததாக இருக்கும் என அவர் தெரிவித்தார்.
வட்டி வீதங்களை மீண்டும் அதிகரிக்க வேண்டுமா என்பதை முடிவு செய்ய கனடிய மத்திய வங்கி பொருளாதார தரவுகளை ஆய்வு செய்யும் என கூறப்படுகிறது.
கனடிய மத்திய வங்கியின் துணை ஆளுநர் நாயகம் வியாழக்கிழமை (08) இந்த தகவலை வெளியிட்டார்.
தேவை ஏற்பட்டால் மேலும் வட்டி வீத அதிகரிப்பு குறித்து மத்திய வங்கி பரிசீலிக்கும் எனவும் அவர் கூறினார்.
கனடிய மத்திய வங்கி புதன்கிழமை (07) தனது முக்கிய வட்டி வீதத்தை 4.25 சதவீதமாக அதிகரித்தது.
மத்திய வங்கியின் அடுத்த கொள்கை நிர்ணயக் கூட்டம் January மாதம் 25ஆம் திகதி நடைபெறவுள்ளது.