December 12, 2024
தேசியம்
செய்திகள்

சிறுவர்களுக்கு எதிரான குற்ற விசாரணையில் 107 பேர் மீது குற்றச்சாட்டு

Ontario மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்ட சிறுவர்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்த விசாரணையில் 107 பேர் மீது குற்றச் சாட்டுக்கள் பதிவாகின.

இணையத்தில் சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம் குறித்த மாகாண ரீதியிலான விசாரணையின் அடிப்படையில் இந்த குற்றச் சாட்டுகள் பதிவாகின.

Ontario மாகாண காவல்துறை, Toronto, Peel, Durham, Hamilton, Ottawa உள்ளிட்ட 27 காவல்துறை பங்காளிகளுடன் இணைந்து இந்த விசாரணையை முன்னெடுத்தது.

மாகாணம் முழுவதும், காவல்துறை சேவைகள் October மாதம் முழுவதும் மொத்தம் 277 விசாரணைகளை மேற்கொண்டன.

ஒரு மாத கால விசாரணை முயற்சியில் மொத்தம் 107 பேர் மீது 428 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

Related posts

Beijing ஒலிம்பிக்கில் முதல் பதக்கம் வென்றது கனடா

Lankathas Pathmanathan

Quebecகில் தொடரும் காட்டுத்தீ எச்சரிக்கை

Lankathas Pathmanathan

NATO படையை வழி நடத்த கனடா இணக்கம்

Leave a Comment