சில கனடிய நகரங்களில் எரிபொருளின் விலை வியாழக்கிழமை (29) 20 சதங்கள் வரை உயர்ந்துள்ளது.
எரிபொருளின் விலை நாடளாவிய ரீதியில் லிட்டருக்கு சராசரியாக மூன்று சதம் உயர்ந்துள்ளது.
இதன் மூலம் நாடளாவிய ரீதியில் சராசரியாக லிட்டருக்கு 1 டொலர் 58 சதமாக எரிபொருளின் விலை உயர்ந்துள்ளது.
சில மாகாணங்கள் ஏனைய மாகாணங்களை விட அதிகமான விலை உயர்வை எதிர்க்கொண்டுள்ளன
Metro Vancouverரில் எரிபொருளின் விலை லிட்டருக்கு 239.9 சதமாக வியாழனன்று விற்பனையாகிறது.
சர்வதேச பிரச்சினைகள், பருவநிலை, மாகாண வரிகள் உள்ளிட்ட பல காரணிகளால் எரிபொருளின் விலைகள் அதிகரிக்கின்றன.