Ontario மாகாண NDP தலைமைப் போட்டியில் Marit Stiles முதல் வேட்பாளராக தனது பெயரை அறிவித்துள்ளார்.
கட்சியின் தற்போதைய கல்வி விமர்சகரான இவர் வியாழக்கிழமை (22) கட்சியை வழிநடத்தும் விருப்பத்தை அறிவித்தார்.
Progressive Conservative அரசாங்கத்தை ஆட்சியில் இருந்து அகற்றுவதில் கவனம் செலுத்தவுள்ளதாக Stiles கூறினார்.
முன்னாள் கல்விச்சபை உறுப்பினரான Stiles, 2018ஆம் ஆண்டு முதல் Davenport தொகுதியை மாகாணசபையில் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.