தேசியம்
செய்திகள்

வருடாந்த பணவீக்கம் கடந்த மாதம் குறைந்துள்ளது!

கனடாவின் வருடாந்த பணவீக்கம் August மாதத்தில் 7.0 சதவீதமாக குறைந்துள்ளது.

எரிபொருளின் விலை வீழ்ச்சியால் இந்த குறைவு பதிவானது.

ஆனால் அன்றாட மளிகை பொருட்களின் விலை தொடர்ந்தும் அதிகரித்து செல்கிறது.

1981 ஆம் ஆண்டிலிருந்து மளிகைப் பொருட்களின் விலைகள் மிக வேகமாக உயர்ந்துள்ளதாக தனது சமீபத்திய மாதாந்த நுகர்வோர் விலைக் குறியீட்டு அறிக்கையில் கனடிய புள்ளிவிவரத் திணைக்களம் தெரிவித்தது.

ஒரு வருடத்திற்கு முன்னர் இருந்ததை விட 10.8 சதவிகிதம் மளிகைப் பொருட்களின் விலை உயர்ந்துள்ளதாகவும் கனடிய புள்ளிவிவரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் August மாதத்தில் எரிபொருளின் விலை 22.1 சதவீதம் உயர்ந்துள்ளது.

ஆனால் June மாதத்தில் இருந்து 18.8 சதவீதம் எரிபொருளின் விலை குறைந்துள்ளது.

Related posts

கனடாவின் பயண கட்டுப்பாடுகள் மாற்றமடைந்தன!

பசுமை கட்சியிலிருந்தும் கட்சியின் அடைப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் விலகும் Annamie Paul!

Gaya Raja

வாகன விபத்தில் மரணமடைந்த RCMP அதிகாரியின் இறுதி சடங்கு

Leave a Comment